பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியரசரும் கானும் 67 திருநாவுக்கரசர், அவர்களைத் தனியே அழைத்து எச்சரிக்கைச் செய்து வகுப்பில் ஒழுங்காக இருந்து பாடத்தைக் கவனிக்கும்படி செய்தாராம். அவர் ஒன் பதாம் வகுப்பில் படிப்பதற்காகச் சென்னையிலே உள்ள தொண்டை மண்டலம் உயர்நிலைப் பள்ளிக்கு வந்து சேர்ந்தார். சென்னைக்கு வந்த பிறகு இங்குள்ள பெரிய புலவர்களை யெல்லாம் கண்டு அவர்களைப் போல் தாமும் பெரிய புலவராக ஆக வேண்டுமென்று அந்தப் பள்ளிப் பருவத்திலேயே நாலடியார், திருக்குறள், பெரிய புராணம், கந்த புராணம், இராமாயணம் முதலிய நூல்களிலுள்ள அரிய பாடல்களை யெல்லாம் நெட்டுருப் பண்ணிவிட்டாராம். அவர் பத்தாம் வகுப்பை அடைந்தபோது மறைமலை அடிகள், பூவை கலியாணசுந்தர முதலியார் ஆகிய இருவ ருடைய தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. அந்த இருவரையும் அவர் ஆசிரியராகக் கொண்டு சங்க நூல் களையும் ஞான சாஸ்திரங்களையும் அந்த இளவயதி லேயே படித்து முடித்துவிட்டார். அவர்தம் பத் தொன்பதாவது வயதிலேயே நல்ல தமிழ்ப் புலமை பெற்றிருந்தும் தமிழாசிரியராக ஆவதற்குப் போதிய ஆதரவு இல்லாமலிருந்தார். அப்போது தான் அவர் «ЧЫГ. நமச்சிவாய முதலியாரின் நட்பைப் பெற்ருள். நமச்சிவாய முதலியார் அப்போது நல்ல நிலையிலிருந் தார். அவர் உதவியைப் பெறுவதற்காகத் திருநாவுக் கரசர், அவர் வேலையிலிருந்து வரும் சமயம் பார்த்து மிகவும் பணிவோடு அவர் எதிரே சென்று , "வணக்கம் ஐயா !” என்று கூறி வருவாராம். ஒரு நாள் நமச்சிவாய முதலியார் இவரை அருகே அழைத்து இவர் ஊர்