பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியரசரும் கானும் (19 இளைஞர்கள் எல்லாம் அவரிடம் தமிழ் கற்கத் துவங்கி விட்டார்கள். அவர் பிரசங்கம் செய்யும்போது அவ ரைவிட வயதிலும் அறிவிலும் பெரியோர்களாக இருந் தவர்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்து பாராட்டினர்கள். காலம் சென்ற ஞானியார் சுவாமிகள், அவரு டைய பிரசங்கத்தைக் கேட்டுப் பாராட்டியதோடு ' "நாவில் அரசே! பாட்டில் மணியே!' என்றெல்லாம் சிறப்பித்துக் கடிதம் எழுதினர்கள் என்ருல், மேலும் சொல்ல வேண்டுவதேயில்லை. அவருடைய பேச்சைப் போலவே கட்டுரைகளும் மிகவும் அழகாகவும் அருமை யாகவுமிருக்கும். செந்தமிழ்ச் செல்வி ”, “தமிழரசு' முதலிய பத்திரிகைகளுக்கெல்லாம் அவர் ஆசிரியராக இருந்திருக்கின் ருர், இராமபிரான் சரிதையைக் கொண்டே நம் நாட்டு மக்கள், எல்லாரோடும் ஒற்றுமையாக வாழ வேண்டிய வழியினை மிக அழகாக எங்கள் ஆசிரியர் எடுத்துரைப்பார். சிலப்பதிகாரக் கதையிலிருந்து நம் தமிழ் நாட்டுப் பழக்க வழக்கங்களே யெல்லாம் பேரறிஞர்களும் கேட்டு வியக்கும்படி விளக்கிக் கூறியிருக்கிருர். நம் தமிழ் நாடக உலகத் திற்கே தந்தை போன்று விளங்கும் பெரியாராய பம்மல் சம்பந்த முதலியார் தலைமையில் அவர் பேசிய பேச்சே இறுதிப் பேச்சாக முடிந்தது. பெரியார் சம்பந்த முதலி யாருக்கும் அவர்மீது மிகவும் மதிப்புண்டு. எங்கள் ஆசிரியர் நகைச்சுவை, வீரச்சுவை, பக்திச்சுவை ஒவ் வொன்றிலும் பேசுவதிலும் எழுதுவதிலும் அந்தக் காலத்தே தலைசிறந்து விளங்கினர். அவருடைய பேச் சைக் கேட்கப் பெரியோரும் சிறியோரும், ஆடவரும் மகளிரும் கூட்டங்கூட்டமாக வந்துகுழுமி இருப்பார்கள்.