பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியரசரைக் கண்டேன் 77 - மறைந்துவிட்டார்கள். அவர்கள் இறந்து இப்போது 28 ஆண்டுகள் ஆகின்றன. நீங்கள் இறந்த துயரத் தாலேயே அவர்களும் இறந்து விட்டார்கள். "அப்படியா நான் இறந்த நிலையிலேயா கிடந்தேன் ? 'உறங்குவதுபோலும் சாக்காடு' என்று வள்ளுவர் சொல்லியது மிகவும் பொருத்தமாகவே இருக்கிறதே !’ என்று சொல்லி அவர் அச்சரியப்பட்டார். பிறகு. அவர், “என் மகன் சபாரத்தினம் எங்கே? மணி. கோட் டிசுவரன் எங்கே ? பாரிப்பாக்கம் கண்ணப்பர் என்ன சொல்கிருர் ? நான் இப்போது எங்கே இருக்கிறேன்? எங்கேயோ ஒரு தோட்டத்தில் இருப்பது போலல்லவா தோன்றுகின்றது. என்னை நீ இங்கே எவ்விதம் அழைத்துவந்தாய் ?' என்றெல்லாம் கேட்கத் துவங்கி விட்டார். அவர் மார்புநோயால் இறந்து 29 ஆண்டுகள் ஆவதையும், எனக்கு இராமலிங்க அடிகளார் நேரில் வந்து கொடுத்த மருந்தைக்கொண்டு அவரை எழுப்பிய வரலாற்றையும், அவர் இப்போது முலைக் கொத்தளத் தில் உள்ள இடுகாட்டில் இருப்பதையும் அறிவித்தேன்! பிறகு அவருடைய மைந்தன் ஓர் உயர்ந்த பதவியில் எம்.ஏ., எல்.டி. பட்டத்துடன் பம்பாய் நகரத்திலே தம் மனைவி மக்களோடு வாழ்ந்து வருவதையும் விளக்கிக் கூறினேன். பாரிப்பாக்கம் கண்ணப்பர், காவேரிப்பாக் கம் நமச்சிவாயனுர், திரு. வி. கலியாண சுந்தரளுர், மறைமலையடிகளார், வல்லை. சண்முகசுந்தரஞர் ஆகிய இவர்களெல்லாம் இறந்து பல ஆண்டுகள் ஆகின்ற தையும் தெரிவித்தேன். அப்போது அவர் பெரிதும் வருந்தி, பிறகு நீ வைத்திருக்கும் மருந்தைக்கொண்டு