பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கித்திலக் கட்டுரைகள் பதைவிட இறந்துபோவதே மேல் என்று எண்ணி மறு படியும் அவர் நினைவுச்சின்னமாக மாறிவிட்டாரோ என்று எண்ணியெண்ணி நான் வருந்தினேன். அத் தகைய பேரறிஞரே இறந்த பிறகு நான் மட்டும் இன் னும் உயிர்வாழ வேண்டுமா ? நானும் இதில் ஒரு துளியெடுத்து என் தலையில் தெளித்துக்கொள்ள லாமா ? என எண்ணிக்கொண்டே நிமிர்ந்தபோது என் கையில் இருந்த பேணு பொத்' என்று தரையில் விழ நான் உடனே திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன். எழுந்து பார்க்கும்போது சரியாக இரவு பன்னிரண்டு. மணி. அப்போதுதான் ஆங்கிலப் புத்தாண்டு (1950ஆம் ஆண்டு சனவரி முதல் நாள்) பிறந்து விட்டதை அறிந்தேன். அந்தக் கனவினையே ஒரு கட்டுரையாக எழுதித் திராவிடன் பொங்கல் மலருக்கு அனுப்பத் தீர்மானித்தேன். - தமிழ்நாட்டு இளைஞர்களே ! இது கனவோ நினைவோ எதுவாக இருப்பினும் நம்நாடு பிறர் பார்த்து நகையாடும் நிலையிலே வளங்குன்றி இருப்பது உண்மை. நம் நாட்டைப் பார்த்துப் பிறர் மதிக்கும்படி யான நிலைமையில் நாம் சமர்த்தாக இருக்கவேண்டும். இதை நம் தலைவர்கள் ஒவ்வொரு மாநாட்டிலும் கூறி வருகின்ருர்கள் . இந்தப் புத்தாண்டில் இருந்தேனும் நீங்கள் பிற நாட்டுக்குச் சரிநிகர் சமானமாக வாழ முய. லுங்கள். அந்தச் சீரிய முயற்சியே நம் முன்னேர் களுக்கும் நம்மைவிட்டுப் பிரிந்த தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் தமிழ்த் திருநாளாகிய இன்று நாம் அளிக்கும் அன்புப்படையலாகும். அனைவருக்கும் எனது வாழ்த்தும் வணக்கமும் உரியன ஆகுக. -ΗΗΗΗΗΗ