பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கித்திலக் கட்டுரைகள் அக்குழந்தையின் உள்ளத்தை நன்கு கவனிக்க இன்னும் சில நாட்களேனும் நாம் பொறுத்திருக்க வேண்டும். அப்பொழுது அக்குழந்தை நம்மைப் பார்க்கிறது. ஆல்ை எவ்விதம் பார்க்கிறது ? நம் முடைய வடிவினை அது உணராது. ஏதோ ஓர் உரு வம் போல் தோன்றும் , அதுவும் ஒரு மங்கலான நிற மாக அதற்குத் தோன்றலாம். நம்மை விட, விளக்கு அதற்கு ஆச்சரியமான பொருள். முதலில் திகைப்பு, பிறகு பழக்கத்தால் ஒளியைக் குறித்த ஓர் உணர்ச்சி; இவ்விதமே அன்னையின் தாலாட்டும், கொஞ்சிக் குலா வும் மொழிகளும் ஒலி வடிவில் பொருளின்றி அதன் மூளையில் பதிகின்றன. குறைந்தது மூன்று மாதங்க ளேனும் கழிந்தால்தான், அக்குழந்தை உணர்வுடைய ஒரு பொருளாக நமக்குத் தோன்றும். அப்போது அது நம்மைக் கண்டு சிரிக்கிறது. குரல் ஒலி எங்கிருந்து வருகிறது என்று அறிய முயல்கிறது. பச்சை, சிவப்பு, மஞ்சள் முதலிய நிறங்களைக் கண்டு மகிழ் கிறது. இப்போது நாம் அதன் உள்ளத்தை ஒருவாறு அறியலாம். உள்ளம் என்பது என்ன ? அஃது ஒரு பெரிய கேள்வியே. எனினும் மூளை, கண், காது, முதலிய இயந்திரங்கள், கை கால், முதலிய உறுப்புக் கள், ஆகிய அனைத்தும் தொழிற் படுவதற்குக் காரண மாகிய ஒன்று என்று வைத்துக்கொள்ளலாம். உள்ளம் எங்கே இருக்கின்றது ? அது மிகப் பெரிய கேள்வி. அது, நம் உடம்பின் எல்லாப் பாகங்களிலும் இருந்து மூளையுடன் சம்பந்தம் பெற்றிருக்கின்றது. எழுத்துக் களாக நினைக்கும் போது நெஞ்சிலிருக்கின்றது