பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவரிமா அன்னர் {)3 நாதர்ை : அதை என்னுல் நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஒன்று இரண்டு அவ்விதமும் செய்யலாம். மற்றவை தம் உடம்பின் அழகு அதல்ை சீர்குலைந்து விட்டதே என்று எண்ணி வருந்தி வருந்தித் தம் உடலை அறவே வெறுத்து உண்ணுதலும் உறங்குதலும் புரி யாது இளைத்து முடிவில் இறந்துபடும் என்று நம் புதற்கு அந்தக் குறள் இடங்கொடுக்கிறது. வேலனர் . அது தற்கொலையாகாதா ? நாதர்ை : அஃதும் ஒருவகையில் தற்கொலேதான் ஆல்ை அத்தகைய உள்ள உறுதி உடையவர் உடல் பொருள், ஆவி எல்லாவற்றையும் அறவே துறக்கக் கூடிய பெரிய ஞானியாகத் தான் இருக்கவேண்டும். அவ்விதம் புரிபவரை நான் இதுவரையில் நேரில் கண்டதில்லை. சங்கநூல்களில் வடக்கிருந்து உயிர்துறத் தல் என்பது இதனையே குறிக்கிறது. இஃது என்ன எளிமையான செயலா ? மானத்தைப் பெரிதாக எண் ணும் பேரறிஞர்கள்-தம் உடலைத் துரும்பாகக் கரு தும் வீரர்கள் சிறந்த தியாகிகள் ஆகிய இத்தகைய பெரியோர்களால் தான் இது முடியும். பெருஞ்சேர லாதன் என்னும் சேர அரசன் தனக்குப் போரின்கண் நேர்ந்த புறப்புண்ணிற்காகத் தன் உடலை வெறுத்து வடக்கிருந்து உயிர் துறந்தனன். கோப் பெருஞ் சோழன் தன்னைப் பகைத் தெழுந்த மைந்தர்கட்குப் புலவர்கள் சொற்படி அரசினைத் தந்து வாழ்க்கையில் வெறுப்புற்று வடக்கிருந்து உயிர் துறந்தனன். மானமே பெரிதாக உடைய இத்தகைய வீரர்களை நோக்கியே திருவள்ளுவர் பாராட்டிக் கூறுகின்ருரே