பக்கம்:நித்திலவல்லி.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

105



“மீண்டும் அங்கே கூடத்துக்கு என்னோடு வந்தால் தெளிவாக விளக்குகிறேன்.”

இளைய நம்பி தயங்கித் தயங்கி நடந்து அழகன் பெருமாளைப் பின் தொடர்ந்தான். கூடத்துக்கு வந்ததும், தன் வெண்ணிற உள்ளங்கையின் பளிங்கு நிறத்தை எடுத்துக் காட்டுவது போன்ற சிவப்புக் கோடுகளில் அழகிய சிறிய ஓவிய அலங்காரங்கள் அந்தக் கைகளில் தீட்டப்பட்பட்டிருந்ததை, அழகன்பெருமாளிடம் காண்பித்தாள் இரத்தினமாலை. அப்போது அழகன்பெருமாள்--

“இந்தக் கைகளை இப்போது நீங்களும் பார்க்க வேண்டும்" என்று இளையநம்பியிடம் கூறினான். இதைக் கேட்டு இளையநம்பி சினத்தோடு அழகன் பெருமாளை ஏறிட்டுப் பார்த்த போது, இங்கே மறுபுறம் அவள் கண்கள் அவனை அன்போடு இறைஞ்சின.

இறைஞ்சும் கண் பார்வையோடு, தன் கைகளை அவன் முன்பு காண்பித்து அவனைக் கேட்டாள் இரத்தினமாலை:-

“இந்தக் கைகளை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?”

“அது என் வேலையல்ல.”

“கூடலுக்கு வந்தவர்கள் இவ்வளவு புரியாதவர்களாக இருக்கலாகாது.”

“என்ன? அந்த வாக்கியத்தை இன்னொரு முறை சொல்லேன், பார்க்கலாம்.”

“கூடலுக்கு...”

“போதும் நிறுத்து! இவ்வளவு வெளிப்படையாக...? மதுரை மாநகரத்துக் கன்னிகைகள் இவ்வளவு நாணமற்றவர்களாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”

“இந்த நகரத்துக்குக் ‘கூடல்’ என்ற பெயர் வெளிப்படையானது! அதில் இரகசியம் எதுவும் இருப்பதாக இதுவரை எனக்குத் தெரியாது. நல்ல அர்த்தத்தில் கூறுகிற சொற்களைக் கூட இந்த இடத்தின் பாவத்தால் தவறாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/106&oldid=945348" இலிருந்து மீள்விக்கப்பட்டது