பக்கம்:நித்திலவல்லி.pdf/264

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

265


பூத பயங்கரப் படைத் தலைவனும் அங்கு வந்தான். புலவர்களையும் வைத்துக் கொண்டு காம மஞ்சரியிடம் தான் விசாரித்தறிய வேண்டியதை எப்படி விசாரிப்பது என்று கலியன் தயங்கினான். அரச குரு அப்படித் தயங்காமல் கேட்டுவிட்டார்:-

“உன்னிடம் ஒப்படைத்த காரியம் என்ன ஆயிற்று? வெற்றிதானே?”

“இல்லை. அந்த முரட்டு ஆடவனை எந்த நளினமான உணர்வுகளாலும் வசப்படுத்த முடியவில்லை. இறுதியில் நான் அவனிடமிருந்து உயிர் தப்புவதே அரும்பாடு ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஒரு கண்ணீர் நாடகம் ஆட வேண்டியிருந்தது. அந்த இறுதி நாடகத்தில் மட்டுமே நான் அவனை வென்று தப்பினேன். மாமன்னருக்குத் துரோகம் செய்து, அவன் மேலுள்ள பிரியத்தால் அவனைத் தப்பிச் செல்ல விடுவதற்கு உதவுவது போல் நடித்துத்தான் நானே, அவனால் எனக்கு அபாயம் விளையாமல் பிழைத்தேன்!”

கலியன் ஏதோ சந்தேகத்துடன் அவளைக் கூர்ந்து நோக்கினான்.


7. விரக்தியில் விளைந்த நன்மை

லிய மன்னனின் பார்வையில் கருணையும், நிதானமும் வறண்டிருப்பதைக் காம மஞ்சரியும் குறிப்பால் புரிந்து கொண்டாள். அவன் தன்னை நம்பவில்லை என்பது அவளுக்குத் தெரிந்தது.

“சொந்த வனப்புக்களைச் சாகஸமாக்கி ஒப்படைத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யாத முதல் களப்பிரப் பெண்ணை இப்போதுதான் நான் சந்திக்கிறேன்” - என்றான் அரசன்.

அவனோடு அரச குரு மாவலி முத்தரையரும் சேர்ந்து கொண்டார்:-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/264&oldid=946422" இலிருந்து மீள்விக்கப்பட்டது