பக்கம்:நித்திலவல்லி.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



“இவர்களோடு நாம் போரிட்டுக் கொண்டிருக்கும் போதே, வேறு களப்பிரர்களும் இங்கே வந்து சேர்ந்து கொண்டால், நம்மால் அவர்களை வெல்ல முடியாமல் போகும். ஆகவே, தந்திரமோ மந்திரமோதான் இந்த நிலையில் நம்மைக் காப்பற்றும். ஆகவே, நான் என்னுடைய மாந்திரீக முறைப்படி இவர்கள் கண்களைக் கட்டி ஏமாற்றிக் குறளி வேலை செய்து காட்டுகிறேன். ‘

“என்ன செய்யப் போகிறாய் செங்கணான்?”

“சிறிது நேரம் பொறுமையாயிருந்து பாருங்கள். புரியும்.”

மற்ற ஐவர் கண்களும் செங்கணானையே நோக்கின. தேனுர் மாந்திரீகன் செங்கணான் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை உச்சரித்தான். எதிரே தரையையும், மதிற் சுவரையும் கையால் சுட்டிக் காட்டினான். ஏதோ மெல்லச் சொன்னான்.

என்ன விந்தை! அடுத்த கணம் தரை நெடுக எங்கிருந்தோ கொண்டு வந்து குவித்தது போல், நாக சர்ப்பங்கள் படமெடுத்துச் சீறின. எதிர்ப்புறம் மதிற்கவர் தீப்பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தது. சிறைக் கோட்ட வாயிலில் நின்ற களப்பிர வீரர்கள், நிலை குலைந்து பதறி ஓடினர். சிலர் பாம்புகளை அடிக்க முற்பட்டனர். சிலர் தீப்பற்றிய சுவரை மருண்டு நோக்கினர். உடனே செங்கணான் தன்னைச் சேர்ந்தவர்களை நோக்கி, “இதைக் கண்டு நம்மவர்கள் பயமோ பதற்றமோ அடையக் கூடாது! இது அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப நான் செய்த குறளி வேலை. அவர்கள் இதைக் கண்டு பாம்பை அடிக்கவும், தீயை அணைக்கவும் முயன்று கொண்டிருக்கும் போதே நாம் உள்ளே புகுந்து நம்மவர்களை விடுவித்து மீட்டுக் கொண்டு வெளியேறி விட முடியும். வாருங்கள்’ என்று துரிதப் படுத்தினான். செங்கணானைப் பின்பற்றி மற்ற ஐவரும் சிறைக்கோட்டத்திற்குள் நுழைந்தனர். வெளியே பாம்பை அடிக்கவும், தீயை அணைக்கவும் கூவி, மற்றவர்களைக் கூப்பிடும் பாலிமொழிக் கூக்குரல்கள் கதறின. அழகன் பெருமாளும் நண்பர்களும் விரைந்து சிறைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/271&oldid=946390" இலிருந்து மீள்விக்கப்பட்டது