பக்கம்:நித்திலவல்லி.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

275



“என் ஏவல் செயல்பட மறுக்கிறது அழகன் பெருமாள்! வேறு யாரோ வலுவான முறையில் மாற்று ஏவல் விடுகிறார்கள். இந்த நரிகளும், ஓநாய்களும் அந்தப் பிறர் ஏவலின் விளைவுதான்-”

இப்படி அவன் கூறி முடிப்பதற்குள் மூடிய கதவுகளின் வெளியேயிருந்து:

“பாம்புக்கும், நெருப்புக்கும் குறளி விடுகின்றவர்கள், இந்த நரிகளுக்கும், ஒநாய்களுக்கும் பயப்பட மாட்டீர்கள் அல்லவா?”, என்று வினாவி விட்டுப் பேய்ச் சிரிப்புச் சிரித்தது ஒரு குரல்.

அந்தக் குரலுக்குரிய மனிதனைப் பார்க்க அவர்கள் பத்துப் பேருடைய இருபது விழிகளும் ஏக காலத்தில் திரும்பி நிமிர்ந்தன.

எதிரே கதவுகளின் வெளியே அரச குரு மாவலி முத்தரையர் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.

மாற்று ஏவலின் கைகள் யாவை என்பது தேனூர் மாந்திரீகனுக்கு இப்போது ஒருவாறு விளங்கியது. மாந்திரீக முறையிலேயே அந்த எதிரியின் கைகளை எப்படிக் கட்டிப் போடலாம் என்று விரைந்து சிந்திக்கத் தொடங்கியது செங்கணான் மனம்.


9. இரத்தினமாலையின் ஊடல்

ழகன் பெருமாளும் அவனைச் சேர்ந்த உப வனத்து நண்பர்கள் ஐவரும் தனக்குத் தெரியாமலும், தன்னிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்ளாமலே கணிகை மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்று விட்டார்கள் என்ற செய்தியை இரத்தினமாலை, தன்னிடம் தெரிவித்த போது, இளையநம்பியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/274&oldid=946424" இலிருந்து மீள்விக்கப்பட்டது