பக்கம்:நித்திலவல்லி.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


கவனித்துக் கொள்வீர்களோ, அப்படிக் கவனித்துக் கொள்கிறவர்களோடு, அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார்.”

-கரடுமுரடான இரும்பில் தொழில் செய்து பழகியவன், முதன்முதலாகப் பொன்னில் இங்கிதமாக நகை செய்திருந்தாற் போல அமைந்தது, இந்த மறுமொழி. இவ்வளவு நளினமானதும் பாதுகாப்பு நிறைந்ததுமான மறுமொழிக்குக் கூட அவளிடம் இருந்து ஒரு மறுப்பு எதிர்ப்பட்டது. அவள் கோபமாக அவனை எதிர்த்து உடனே கேட்டாள்:

“அதெப்படி முடியும்? இந்த மாளிகையில் நான் அவரைக் கண்காணித்துப் பேணிப் பாதுகாத்து, உபசரிப்பது போல் வேறு எங்கும், வேறு எவராலும் அவரை என்றும் உபசரித்து விடமுடியாது? உன் ஒப்புவமையே தவறானது! நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது தெரிந்திருந்தும், நீயே இப்படி ஒப்பிடலாமா? உன் உவமை தவறானது...”

“தவறுதான் அம்மா! அவர் நல்ல இடத்தில், நன்றாக இருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெளிவாகப் புலப்படுத்தவே அப்படிச் சொன்னேன். அந்த ஒப்புவமைக்கு வேறு எந்த வகையிலும் முழுமையான அர்த்தம் இருப்பதாக நீங்கள் நினைக்கவோ, இந்த ஏழையின் மேல் கோபப்படவோ கூடாது அம்மா!”

அவன் இப்படி மறுமொழி கூறிய பின் அவள் முகத்தில் கோபத்தின் சாயல் மெல்ல மறைந்தது.

“மீண்டும் எப்போது கோநகருக்குப் போக வேண்டுமோ, அப்போது என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய் விடாதே. பெரியவர் எங்கிருக்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டால் கூடவா ஆபத்து?”

“போகும் போது உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் போகமாட்டேன் அம்மா!” - என்று அவளுடைய வினாவின் முன் பகுதிக்கு மட்டும் மறு மொழி கூறிவிட்டு மெல்லச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/291&oldid=946453" இலிருந்து மீள்விக்கப்பட்டது