பக்கம்:நித்திலவல்லி.pdf/312

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

313


பூத பயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்துக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான்.

“உள்ளே வருகிறவர்கள் என்ன செய்தாலும் வாளா இருப்பதா, அல்லது ஒரு நிலைமைக்கு மேல் அவர்களை எதிர்த்துத் தாக்கி விட்டுத் தப்பி ஓட முயற்சி செய்யலாமா, உள்ளே வருகிறவர்களை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு நம் எண்ணிக்கை இருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள்? என்ன செய்யலாம்?” என்று கழற்சிங்கன், அழகன் பெருமாளின் காதருகே மெல்ல வினாவினான்.

“அவசரப்பட்டு விட வேண்டாம். அது நிலைமையை மேலும் கெடுத்து விடும். நீ சொல்கிறபடி செய்ய வேண்டும் என்றால், அப்படிச் செய்யும் வண்ணம் நானே சைகை காட்டுவேன். நான் சைகை காட்டாத பட்சத்தில், என்ன நடந்தாலும் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது” - என்று அழகன் பெருமாளிடமிருந்து கழற்சிங்கனுக்கும் பிறருக்கும் மறுமொழி கிடைத்தது.

தென்னவன் மாறனும், அவனோடிருந்த திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனுமே, தலைக்கு ஐவரை எதிர்க்கவும், அடித்து நொறுக்கவும் போதுமானவர்கள் என்றாலும், அவர்கள் பசி தாகங்களால் தளர்ந்து போய் நலிந்திருக்கிறார்கள் என்று அழகன் பெருமாளுக்குப் புரிந்தது. அவசரப்பட்டுத் தப்ப முயன்று, முடியாமல் அகப்பட்டுக் கொண்டால் பின்பு நிரந்தரமாகவே தப்ப முடியாமற் போய் விடுமோ என்ற முன்னெச்சரிக்கைதான் அழகன் பெருமாளுக்கு நிதானத்தைக் கொடுத்திருந்தது. உள்ளே வந்த பூத பயங்கரப் படைத் தலைவன், முதலில் தென்னவன் சிறுமலை மாறனையும், குன்றம் நிற்பது போல் தோன்றிய அறக்கோட்டத்து மல்லனையும் மற்றவர்களிடம் இருந்து தனியே பிரித்து நிறுத்திச் சங்கிலிகளாலும், விலங்காலும் பிணைத்துக் கட்டுமாறு, தன்னோடு வந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டான். இந்தக் கட்டளையை அந்த வீரர்கள் நிறைவேற்றுமாறு விடுவதா, எதிர்த்துத் தாக்குவதா என அறியும் ஆவலோடு நண்பர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/312&oldid=946529" இலிருந்து மீள்விக்கப்பட்டது