பக்கம்:நித்திலவல்லி.pdf/344

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


21. ஒரு போதையின் உணர்வுமே

பெரியவர் மதுராபதி வித்தகரின் புதிய நல்லடையாளச் சொல் பற்றிய ஒலையை வையையாற்றின் திருமருத முன்துறையில் வரிசையாக இருந்து மருத மரங்களில் ஒன்றில் வைத்து விட்டு, விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போதே, திருமோகூர் திரும்பியிருந்தான் கொல்லன். ஊர் திரும்பியதும், உடனே காராளரைச் சந்தித்துப் புதிய நல்லடையாளச் சொல்லை அறிவிக்க வேண்டியிருந்தாலும், பூத பயங்கரப் படையினருக்காக, ஒரு போக்குக் காட்ட நினைத்துத் தன் உலைக்களத்திற்குச் சென்றான் அவன். விடாத நடையினால் கைகால்கள் சோர்ந்திருந்தன. கண்களில் உறக்கம் வந்து மன்றாடிக் கொண்டிருந்தது. விடிகின்ற வரை காத்திருக்க முடியாமல், அவன் மனம் பரபரப்படைந்தது. காராளரைச் சந்திக்க விரும்பியது.

அதே வேளையில், திருமோகூர் பெரிய காராளர் மாளிகையில் வேறோர் மெல்லிய இதயமும் உறக்கமின்றி, சிந்தித்துத் தவித்துக் கொண்டிருந்தது. வைகறையின் தண்மையில் பூக்கள் இதழ் விரிக்கும் அந்த அருங்காலை வேளையில் செல்வப் பூங்கோதையின் இதய மலரும், இதழ் விரித்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அந்த ஒரு பெரிய மலரில் பல்லாயிரம் பூக்கள் நறுமணமும் ஒருங்கிணைந்தது போல் அவ்வளவு நினைவுகளை அவள் நினைத்திருந்தாள். பூட்டி வைத்தாலும் பேழைக்கு உள்ளேயே மணக்கும் சந்தனத்தைப் போல் நினைவுகள் அவள் உள்ளத்தில் மணந்து கொண்டிருந்தன. அவளுடைய இந்த நிலையை, அவள் தாயும் கண்டிருந்தாள்.

“உறங்கவில்லையா மகளே? இரவு முழுவதும் உன் கைகளின் வளை ஒலிகளையும், நீ படுக்கையில் புரள்வதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/344&oldid=946561" இலிருந்து மீள்விக்கப்பட்டது