பக்கம்:நித்திலவல்லி.pdf/352

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

353


சொல்லி, இரண்டு மூன்று முறை கொல்லனை வற்புறுத்தி விட்டார் அவர். தன்னை விட உயர்ந்தவரும், தன்னைப் போன்றவர்களின் செஞ்சோற்றுக் கடனுக்கும், நன்றிக்கும் உரியவரும் ஆகிய காராளரிடம், “தயை செய்து அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள்!” என எப்படிக் கடுமையாக மறுத்துச் சொல்வது என்று புரியாமல் திகைத்தான் கொல்லன். திகைப்பு ஒரு புறமிருந்தாலும், முள்ளிலிருந்து மேலாடையை எடுப்பவன், முள்ளும் குத்தி விடாமல், ஆடையும் கிழிந்து விடாமல் மிக மிகக் கவனமாக ஆடையை எடுப்பது போல், அவர் மனமும் புண்படாமல், தன் உணர்வும் பலவீனப்பட்டுப் போகாமல், மிக மிகச் சாதுரியமாக அவருக்கு மறுமொழி கூறினான் கொல்லன்:-

“ஐயா! தாங்கள் இப்போது என்னிடம் வற்புறுத்திக் கேட்பதை விடப் பெரிய செய்தி ஒன்றைத் தங்களிடம் கூறுவதற்காகவே, பெரியவர் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார். நமது பழைய நல்லடையாளச் சொல் எப்படியோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது. உடனே அந்தச் சொல்லை மாற்றிப் புதிய சொல்லை நியமிக்கா விட்டால் ஏற்படும் அபாயங்களை உணர்ந்து புதிய சொல்லை நியமித்து அனுப்பி இருக்கிறார், அவர். அதைத் தங்களிடமும் தங்கள் மூலமாக வேறு சிலரிடமும் அறிவிக்கவே, அடியேன் இவ்வளவு அவசரமாக இங்கே வந்தேன்.”

“என்ன சொல் அது? மற்றப் பகுதிகளுக்கும் அதைச் சொல்லி அனுப்பியாயிற்றா, இல்லையா?”

காராளரின் இந்த வினாவுக்கு அதற்கு முன் பேசியது போல், உரத்த குரலில் மறுமொழி கூறாமல் அவர் காதருகே நெருங்கி, அவருக்கு மட்டுமே கேட்கிற இரகசியக் குரலில் மறுமொழி கூறினான் கொல்லன். அவரும் அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார்.

“நீ எச்சரிப்பதைப் பார்த்தால், இந்தப் புதிய நல்லடையாளச் சொல்லை எல்லாருக்கும் கூற வேண்டாம் என்றல்லவா அர்த்தப் படுகிறது?”

நி.வ - 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/352&oldid=946569" இலிருந்து மீள்விக்கப்பட்டது