பக்கம்:நித்திலவல்லி.pdf/370

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

371



இதைக் கேட்டு ஒரு கணம் தயங்கினாற் போல் நின்றார் மதுராப்தி வித்தகர். அடுத்த கணமே, அவர் கூறலானார்:

“உனக்குத் தெரியாது! நாம் அப்படிச் செய்யக் கூடாது. மலையின் உட்பகுதிக்குப் போகப் போக, நாம்தான் நம்மைத் தப்ப முடியாதவர்களாகவும், அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்கிறவர்களாகவும் மாற்றிக் கொள்கிறோம். நீங்கள் கூறுவது சாதுரியமான உபாயம் அல்ல. கீழே மலை அடிவாரத்துக் காடுகளிலும், சிலம்பாறு தரையிறங்கும் இடத்திலும் எதிரிகள் சிலர் வந்து தங்கியிருக்கிறார்கள் என்றால், நம்மவர்களைக் கொண்டு அவர்களைக் கண்காணிக்கச் செய்யுங்கள். அவர்கள் ஒருவேளை தங்கியிருக்கும் இடங்களிலிருந்தே சந்தேகம் நீங்கித் திரும்பிப் போய் விடலாம். அப்படித் திரும்பாமல் முன்னேறி, இங்கே வரத் தொடங்குவார்கள் என்று ஆகுமாயின், அப்புறம் என்ன செய்யவேண்டும் என்பதை நான் சொல்லுவேன்.”

அந்த ஆபத்துதவிகள் இருவரும் வந்த போது, இருந்த சிறிதளவு சலனமும் இப்போது அவரிடம் இல்லை. அவர் கூறியதைக் கேட்ட பின்பும், ஆபத்துதவிகள் தயங்கி நின்றனர். அவர்களைத் துரத்தாத குறையாக இரைந்தார் அவர்.

“உடனே போய் மரங்களின் மேல் ஏறி, அடர்ந்த கிளைகளிடையே மறைந்திருந்து கவனியுங்கள். பூத பயங்கரப் படையினர் மேலே வருவார்கள் என்று சிறு அறிகுறி தெரிந்தாலும், உடனே வந்து சொல்லுங்கள். மற்றவற்றைப் பின்பு பார்த்துக் கொள்ளலாம்.”

அவர்கள் சென்றார்கள். அவர் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். பல்லாண்டு கால இருளுக்குப் பின்னர், மீண்டும் பாண்டியர்கள் நாட்டைக் களப்பிரர்களிடமிருந்து மீட்கும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதை அவர் மனம் கணித்தது. மனத்தில் இயல்பாகப் பொங்கும் அந்த நம்பிக்கை வீண் போகாது என்பது அவருக்குத் தெரியும். அந்தப் பொற்காலம் நெருங்குவதை உணர்ந்துதான், திருக்கானப்பேர்க் காட்டிலும், தென்னவன் சிறு மலையிலும், கொற்கையிலும் மறைந்து வளர்ந்து கொண்டிருந்த மூன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/370&oldid=946587" இலிருந்து மீள்விக்கப்பட்டது