பக்கம்:நித்திலவல்லி.pdf/383

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

385


களப்பிரர்கள் மனப்பூர்வமாக நம்பிப் பாண்டியர்களுக்கு எதிரான பூத பயங்கரப்படை, பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாவற்றையும் கை விடுகிற வரை பொறுமையாக இருந்தார் மதுராபதி வித்தகர்.

‘இனி நமக்கு எதிர்ப்பே இல்லை’ என்று களப்பிரர்கள் அயர்ந்த பின்பே, சூழ்நிலை கனிந்திருப்பதை அவர் உறுதி செய்து கொண்டார். களப்பிரர்களை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்துவதற்கு அதுதான் ஏற்ற நேரம் என்று எல்லாக் கோணங்களிலும் கணித்து முடிவு செய்த பின், அவர் வெகு காலத்துக்குப் பின் முதன் முதலாக, ஒரு முனை யெதிர் மோகர் படை வீரனைத் திருமோகூருக்கு இரகசியத் தூது அனுப்பிப் பெரிய காராளரையும், கொல்லனையும் அழைத்து வருமாறு ஏவினார். அப்போது நல்ல மாரிக்காலம். ஒவ்வொரு பிற்பகலிலுமே மழை கொட்டிக் கொண்டிருந்தது. மாலையிலும், இரவிலும் திருமால் குன்றத்துச் சிலம்பாற்றில் பயங்கர வெள்ளம் பெருகி ஓடியது.

காரிருளும் இடியும் மின்னலுமாக மழை மிக மிக அதிகமாயிருந்த அந்த இரவில், பெரிய காராளரும், கொல்லனும், தப்பி வந்து அவர்களோடு திருமோகூரில் மறைந்திருந்த குறளனும், பெரியவரைக் காண்பதற்காகத் திருமால் குன்றத்துக்குத் தேடி வந்தனர். அவர்கள் தேடி வந்த சமயத்தில், பெரியவர் சிலம்பாற்றின் மறு கரையில் தங்கியிருந்தார். சிலம்பாற்றில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு அதிகமாகி இருந்ததால், திருமோகூரிலிருந்து சென்றிருந்த மூவரும், ஆற்றின் மறு கரையில் இருளோடு இருளாக, நெடு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆற்றின் குறுக்கே பாலமிட்டது போல், பிரம்மாண்டமான மரம் ஒன்று முறிந்து விழுந்திருந்தது. அந்த மரத்தை நம்பி, ஆற்றைக் கடக்கலாமா, கூடாதா என்று அறிவதற்காக முதலில் தங்கள் மூவரிலுமே உருவில் சிறியவனான குறளனை, அந்த மரத்தின் வழியே மறு கரைக்குச் செல்லும்படி அனுப்பிப் பார்த்தார்கள் அவர்கள். குறளன் ஓர் இடையூறுமின்றி மறு கரைக்குப்

நி.வ-25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/383&oldid=946600" இலிருந்து மீள்விக்கப்பட்டது