பக்கம்:நித்திலவல்லி.pdf/396

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


உறைத்துப் பார்க்கக் கருதி, மாவலி முத்தரையர் கோநகரில் பரப்புவாரானால், அதன் விளைவாகக் கோநகரிலேயே இருக்கும் தன் மனிதர்களும் கூடக் குழப்பமடைய நேரிடுமே என்ற ஒரு பயம்தான் அப்போது அழகன் பெருமாளின் அந்தரங்கத்தில் இருந்தது.

மாவலி முத்தரையர், தான் கூறிய மதுராபதி வித்தகர் பற்றிய செய்தியைக் கோநகரில் பரவச் செய்து விடுவாரானால், அதன் விளைவாகக் கணிகை இரத்தினமாலை, இளையநம்பி, பாண்டியர்களுக்கு வேண்டிய பிறர் எல்லாருமே ஒன்றும் புரியாமல் திகைக்கவும், குழப்பம் அடையவும் நேரிடுமே என்று அஞ்சினான் அழகன் பெருமாள். ஆனால், அப்படியெல்லாம் குழப்பமோ, கெடுதலோ நேராது என்றும் அவன் உள் மனத்தில் ஏதோ ஓருணர்வு உறுதியாக நம்பிக்கை அளித்தது. பெரியவரைத் தொடர்பு படுத்திக் கூறிய ஒரு பொய்க்காக அவன் மனம் வருந்தியது. ‘புரை தீர்ந்த நன்மை பயக்கக் கூடியது’ என்றால், அப்படிப்பட்ட ஒரு பொய்யையும் சொல்லலாமா என்ற முன்னோர் முடிவையும், வழுவமைதியையும் நினைத்தால், ஓரளவு அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது.

தான் சமயோசிதமாக இட்டுக் கட்டிக் கூறிய இந்தப் பொய்யை, மாவலி முத்தரையர் முழுமையாக நம்பி விடா விட்டாலும், மதுராபதி வித்தகர் மறைந்திருக்கும் இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும் என்ற வேகத்தைக் குறைக்கவும் திசை திருப்பவும் இது பயன்பட முடியும் என்று அழகன் பெருமாள் நம்பினான். சிறையிலிருந்தபடியே தந்திர உபாயத்தின் மூலம் செய்ய முடிந்த மிகப் பெரிய தேச சேவையாக இதை அவன் கருதினான்.

தானும், ஏனைய உப வனத்து நண்பர்களும், தென்னவன் மாறனைச் சிறை மீட்கும் குறிக்கோளுடன் பூத பயங்கரப் படையினர் போன்ற மாறு வேடத்தில் அரண்மனைக்குள் நுழைந்த போது, இப்படிப் பன்னெடுங் காலமாகச் சிறையில் தாங்களே சிக்கித் தவிக்க நேரிடும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/396&oldid=946613" இலிருந்து மீள்விக்கப்பட்டது