பக்கம்:நித்திலவல்லி.pdf/410

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


என்றான் கொல்லன். அவனுடைய சாதுரியமான மறுமொழியை உள்ளுற வியந்து கொண்டே, இளையநம்பி அவனை மேலும் கேட்டான்:

“தென்னவன் மாறனுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிப் பெரியவர் என்ன எண்ணுகிறார்?”

“அதை நான் அறிய முடியவில்லை ஐயா! ஆனால், பெரியவரின் துயரங்களோ, மகிழ்ச்சிகளோ மிகவும் ஆழமானவை. மேலோட்டமாகத் தெரியாதவை. திருமோகூருக்கு வந்து சேர்ந்தவுடன், தென்னவன் மாறனுக்குப் பெரியவர் கூறியிருந்த அறிவுரைகளின்படி மட்டும் அவர் நடந்து கொண்டிருப்பாராயின், இப்படிச் சிறைப்பட்டிருக்கவும், கழுவேறவும் நேரவே நேர்ந்திருக்காது. தென்னவன் மாறனின் உணர்ச்சி வேகமும், முன் கோபமுமே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டன. தாங்களும் அப்படி உணர்ச்சி வசப்பட்டு, எங்காவது அகப்பட்டுக் கொண்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான், ‘இங்கே இந்தக் கணிகை மாளிகையை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் எங்கேயும் வெளியேறி விடக் கூடாது’ என்று தங்களுக்குத் திரும்பத் திரும்ப வற்புறுத்திச் சொல்லி அனுப்புகிறார் பெரியவர். ‘கை கால்களைக் கட்டிப் போட்டு ஒரே இடத்தில் சிறை வைத்தது போல் ஆக்கி விட்டாரே’ என்று தங்களுக்குக் கூடப் பெரியவர் மேல் மனத்தாங்கல் இருந்தாலும் இருக்கலாம். ஆனால் பெரியவர் இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், தாங்கள் எங்கெங்கோ எத்தனை எத்தனையோ அபாயங்களில் சிக்கிக்கொள்ள நேர்ந்திருக்கும்-” என்று ஒரளவு விரிவாகவே இளையநம்பிக்கு மறுமொழி கூறினான் கொல்லன்.

“காராளர் தீர்த்தயாத்திரை புறப்பட்டு எவ்வளவு காலமாயிற்று?” என்று இளைய நம்பி வினாவிய போது, “ஐயா! அவர் யாத்திரை புறப்பட்டுப் போய் அதிக நாட்களாகி விட்டன. அதனால்தான், இந்த மடலைத் தங்களிடம் இவ்வளவு காலந் தாழ்த்திச் சேர்ப்பதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/410&oldid=946628" இலிருந்து மீள்விக்கப்பட்டது