பக்கம்:நித்திலவல்லி.pdf/415

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

417


ஒப்புமையே தவறானது. நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் நீயே இப்படி ஒப்பிடலாமா? உன் உவமை மிக மிகத் தவறானது' என்று கொல்லனைக் கடிந்து கொண்டேன். நீங்களே சொல்லுங்கள். உங்களிடம் இந்தப் பேதை கொண்டாட முடிந்த உரிமையை, இன்னொருவரும் கொண்டாட முடியும்படியான இடத்திலேயா தாங்கள் வாழ்கிறீர்கள்? மறுபடி திருமோகூர் மண்ணில் தங்கள் பாதங்கள் பதியும் நாள் எப்போது வரும் ஐயா? இங்கு ஒருத்தி தங்களை நினைத்துத் தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறாள் என்பதாவது, தங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா?

தீர்த்த யாத்திரையை முடித்துக்கொண்டு எப்போது மீண்டும் திருமோகூர் திரும்புவோம் என்பதைத் தந்தையார் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. நான் தொழ வேண்டிய தெய்வம் மதுரையில் இருக்கிறது. என் பெற்றோர் வேறு எங்கேயோ இருக்கும் பலப் பல தெய்வங்களைத் தொழுவதற்காக என்னை அழைத்துப் போகிறார்கள். என்னுடைய தெய்வத்தின் கடுங்கோன்மை தவிர்த்து, அதன் அருளை என்றைக்கு நான் அடையப் போகிறேனோ தெரியவில்லை. தங்களைக் கடுங்கோன் என்று கூறியதற்காகப் பெருந்தன்மையோடு இந்த எளியவளைப் பொறுத்தருள வேண்டும். அப்படி ஒரு சாபமே கொடுக்கிற அளவிற்குத் தாங்கள் என்னைத் தவிக்க விட்டிருக்கிறீர்கள் என்பதைத்தான், தங்களுக்கு இந்தப் பேதை சூட்டியிருக்கும் மென்மையும், இங்கிதமில்லாத புதிய பெயர் குறிப்பிடுமே ஒழிய, அகங்காரத்தைக் குறிப்பிடாது. என் அகங்காரங்களை நான் உங்களிடம் பறிகொடுத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்பதைத் தாங்களே நன்கு அறிவீர்கள்.

இவ்வளவில் இப்போது தங்கள் பாதார விந்தங்களில் மானசீகமாக வீழ்ந்து, வணங்கி இந்த மடலை முடிக்கிறேன். முடிவாக ஒரு வார்த்தை-நானும் பெற்றோர்களும் தீர்த்த யாத்திரை முடித்து திரும்பும் போது, நீங்கள் வெற்றிவாகை சூடி

நி.வ-27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/415&oldid=946633" இலிருந்து மீள்விக்கப்பட்டது