பக்கம்:நித்திலவல்லி.pdf/429

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

431



‘தீர்த்த யாத்திரை முடிந்து காராளர், மனைவியோடும் மகளோடும் திருமோகூர் திரும்பி விட்டார். களப்பிரர்களிடம் இருந்து பாண்டிய நாட்டை மீட்கும் முயற்சிக்கு உறுதுணையாகப் பல்லவர்களை வடக்கு எல்லையிலும், சேரர்களைத் தென்மேற்கு எல்லையிலும் தாக்குதல் தொடங்கச் சொல்லி, உதவி கேட்டுத்தான் தீர்த்த யாத்திரை என்ற பெயரில் காராளரை அனுப்பியிருந்தேன். ஏற்கெனவே பல்லவர்கள் களப்பிரர்களைத் தமிழ் நாட்டிலிருந்து விரட்டும் எண்ணம் கொண்டிருந்ததால், நமது வேண்டுகோளை ஒரு நிபந்தனையுமின்றி உடனே ஏற்று விட்டார்கள். ஏற்றதற்கு அடையாளமாக, வடக்கு எல்லையில் வெள்ளாற்றங்கரையில், அவர்கள் படை களப்பிரர்களை எதிர்த்து வந்து போர் முரசு கொட்டிவிட்டது. ஆனால், தென்மேற்கே நமக்கு உதவ வந்துள்ள சேர வேந்தன், இப்போது ஏறக்குறைய ஒரு சிற்றரசனின் நிலையில் இருந்தாலும், நமக்கு இந்த உதவியைச் செய்ய ஒரு நிபந்தனை இட்டிருக்கிறான். அதை இப்போதே உன்னிடம் கூற எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ஆனால், வேறு வழி இல்லை. அந்த நிபந்தனைக்கு உன் சார்பில் நான் இணங்கி விட்டேன். என் பொருட்டு நீயும் அதற்கு இணங்கியே ஆகவேண்டும். நாம் அரசைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடும் போது, அந்த நிபந்தனை என்ன என்பதை உனக்குச் சொல்லுகிறேன்’ என்று ஒலையை முடித்திருந்தார் அவர்.


9. புது மழை

தீர்த்த யாத்திரை முடித்துத் திரும்பியதுமே, மகளையும் மனைவியையும் திருமோகூரில் கொண்டு வந்து விட்ட பின், உடனே பெரியவரைச் சந்திப்பதற்காகத் திருமால் குன்றத்திற்கு விரைந்தார் பெரிய காராளர். அப்படிச் சென்றவர் அதன் பின் பல நாட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/429&oldid=946647" இலிருந்து மீள்விக்கப்பட்டது