பக்கம்:நித்திலவல்லி.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

நித்திலவல்லி / முதல் பாகம்


முயல்வதும் தான் அழகிய பெண்ணின் சுபாவங்களோ என்று சிந்தித்தான் அவன். பெண்களின் நாற்குணங்களில் ஒன்றாகிய பயிர்ப்பு என்பது இதுவாகத் தான் இருக்க வேண்டும் என்றும் தோன்றியது அவனுக்கு. ஆடவன் அறிய முயலும் போதெல்லாம் பெண் அறியாமையாகி விடுகிறாளோ என எண்ணினான் அவன். அந்த வேளையில் பெரிய காராளர் அவனுடைய நளின நினைவுகள் கலைந்துபோகும்படி வேறு புதிய செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்.


5. பூத பயங்கரப் படை

பெரிய காராளர், இளைய நம்பியிடம் கூறத் தொடங்கினார்:

‘நீங்கள் எங்களுடைய சித்திர வண்டிகளில் மதுரைக்குப் போய்க் கோட்டைக்குள் நுழைவது உங்களுக்கு மிகவும் எளிதாயிருக்கும். இதே வண்டிகளில்தான் நான் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல் அனுப்பி வைப்பது வழக்கம். அதனால் என்னுடைய இந்த வண்டிகளையும், ஆட்களையும் கோட்டைப் பாதுகாவலர்களுக்கு நல்ல பரிச்சயம் உண்டு. என் மனைவியும், மகளும் தவிர மூன்றாவதாக நீங்கள் போகிறீர்கள். உங்களை அவர்கள் ஐயப்படாமல் இருக்க வேண்டும். கோட்டை வாயில் வரை போய்ச் சேருவதற்குள் வழியில் அங்கங்கே சந்தேகக் கண்களோடு திரியும் பூத பயங்கர்ப் படையினர்பார்வையிலும் நீங்கள் படாமல் தப்ப வேண்டும்.”

“எங்களோடு தாங்கள் மதுரை மாநகருக்கு வர வில்லையா, காராளரே?”

“நான் வர முடியாது! சில காரணங்களுக்காகப் பெரியவரோடு இங்கே இன்றியமையாதபடி இருக்கும் கடமை பெற்றுள்ளேன்! தவிரவும் வழக்கமாக நான் அதிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/45&oldid=715154" இலிருந்து மீள்விக்கப்பட்டது