பக்கம்:நித்திலவல்லி.pdf/450

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

452

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


கொல்லன் உடனிருந்ததால், சுபாவமாகச் சொல்லுவது போல் இந்தச் சொற்களை அவள் கூறியிருந்தாலும், நீறு பூத்த நெருப்பைப் போல் இதன் ஆழத்திலிருந்து, அவளுடைய துயர வெம்மை கனல்வதை இளையநம்பி உணர முடிந்தது. அந்த நிலையில் அவளோடு அதிகம் பேச விரும்பாமல், கொல்லனுடன் நிலவறைக்குச் சென்று படைவீரர்களைக் கவனிக்கும் எண்ணத்தோடு புறப்பட்டான் இளையநம்பி.


12. எதிர்பாராத அழைப்பு

புறத்தே பெய்த புது மழையைப் போல், இதயத்திலும் ஒரு புதுமழை பெய்தாற் போன்ற மகிழ்ச்சி நிலவியதை அடுத்து, முற்றிலும் எதிர்பாராத விதமாய் மின்னலைப் போல் வந்து தோன்றிய கொல்லன், இளையநம்பியின் அந்த ஓலையைக் கொடுத்து விட்டுப் போகவே, செல்வப் பூங்கோதையின் உவகை கட்டுக்கட்ங்காத பூரிப்பாகப் பெருகியது. பல நாள் வெம்மையைப் புறத்தே போக்கி விட்ட அந்தப் புது மழையைப் போல், தன் இதயத்தின் கோபதாபங்கள் எல்லாமே உடன் மறைந்து விட்டாற் போலிருந்தது அவளுக்கு. காத்தற் கடவுளாகிய, இருந்த வளமுடைய பெருமாளே, தன் துயரங்களுக்கு இரங்கி அருள் புரிந்து விட்டதாக அவள் உணர்ந்தாள். தானே உருகி உருகி ஒலைகளை எழுதிக் கொண்டிருந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, அவரிடம் இருந்தும் ஓர் ஒலை தனக்கு மறுமொழியாகக் கிடைத்ததைத் திருவிழாக் கொண்டாடி வரவேற்கலாம் போலிருந்தது. அதை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்வதற்கு ஏற்ற தனிமையை நாடி, மாளிகையின் பின்புறமிருந்த மலர் வனத்திற்குச் சென்றாள் அவள். மாலை வேளையின் இதமான சூழ்நிலையும், அவளுடைய உல்லாசத்திற்குத் துணை புரிவதாயிருந்தது. தாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/450&oldid=946673" இலிருந்து மீள்விக்கப்பட்டது