பக்கம்:நித்திலவல்லி.pdf/469

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

471



“ஆனால், அந்தத் துன்பங்களைப் புரிந்து கொள்ளாமல், முன்பு சில வேளைகளில் நீயும் என் மேல் கோபப்பட்டு உனக்குள் கொதித்திருக்கிறாய், செல்வப்பூங்கோதை”

அவள் துணுக்குற்றாள். எல்லாமே அவருக்குத் தெரிந்திருக்குமோ என்று பயமாகவும் இருந்தது. ஆயினும் விட்டுக் கொடுக்காமல் பேசினாள்:-

“அப்படி இந்தப் பேதை அறியாமையால் எப்போதேனும் எண்ணியிருந்தாலும், அதைத் தாங்கள் பொறுத்தருளக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் ஐயா!”

“கோபிப்பதற்கும், பொறுப்பதற்கும் இது தருணமில்லை பெண்ணே! நாளை, பொழுது புலர்வதற்குள் மதுரை மாநகரின் கோட்டையில் பாண்டியர் மீனக் கொடி பறக்கத் தொடங்கி விடும். அக்கொடியைக் கீழே இறக்கி, வேற்றவர் கொடி பறக்க நேரிடாமல் இருக்க, இங்குள்ள ஒவ்வொருவரும் சபதம் செய்ய வேண்டும். அந்த வகையில் நீ செய்ய வேண்டிய சபதமும் ஒன்றுண்டு.”

“தங்கள் கட்டளை எதுவாயினும் அதைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன், ஐயா! தயங்காமல் சொல்லியருளுங்கள். ஏற்கத் தலை வணங்கி நிற்கிறேன்.”

“வெற்றி பெறும் பாண்டியர் நலனுக்கு இடையூறாக, எந்த நலனையும் நான் அடைய முயல மாட்டேன். பாண்டிய நாட்டின் நலனை விட, என் சொந்த நலன் பெரிதில்லை என்று கொற்றவை சாட்சியாக ஒரு சத்தியம் செய்ய வேண்டும் நீ. இப்படிச் சத்தியங்களையும், வாக்குறுதிகளையும் என்னுடன் பழகும் எல்லோரிடமும் நான் கேட்டுப் பெற்றிருக்கிறேன் அம்மா! அது போல் இப்போது உன்னிடமும் கேட்கிறேன்.”

செல்வப்பூங்கோதை உடனே அந்தச் சத்தியத்தைச் செய்ய முயன்ற போது, சொல் எழாமல் அவள் நா இடறி அரற்றியது. மனத்தை திடப்படுத்திக் கொண்டு அவர் கூறிய சொற்களையே, மீண்டும் சொல்லிக் கொற்றவை சாட்சியாகச் சத்தியம் செய்தாள் அவள். அவர் முகம் முதன் முதலாக அவள் கண் காண மலர்ந்தது. ஒரு மகிழ்ச்சிக்காக இப்படி வெளிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/469&oldid=946698" இலிருந்து மீள்விக்கப்பட்டது