பக்கம்:நித்திலவல்லி.pdf/484

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


17. கடமையும் காதலும்

போர் நிகழும் எல்லைகளில் இருந்து வந்திருந்த தூதர்கள், வெற்றிச் செய்தி கொண்டு வந்திருந்தார்கள். கோநகரையும், சுற்றுப் புறங்களையும் பாண்டியர்கள் கைப்பற்றி விட்டதன் விளைவாக வடக்கே வெள்ளாற்றங்கரைப் போரில் களப்பிரப் படை வீரர்கள் சின்னாபின்னமாகி அழிந்தார்கள். எஞ்சியவர்கள், மதுரைக்கு திரும்பாமல் தங்கள் பூர்வீகமாகிய வடகருநாடக நாட்டை நோக்கித் தோற்று ஓடிப் போய் விட்டார்கள். பாண்டியர்கள் உள்நாட்டையும், கோநகர் கோட்டையையும், அரண்மனையையும் கைப்பற்றி வென்று, களப்பிரக் கலியரசனைக் கொன்று விட்டார்கள் என்று செய்தி தெரிந்ததும், களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த பூத பயங்கரப் படையினருக்கும், ஏனைய களப்பிர வீரர்களுக்கும் மிகப்பெரிய தடுமாற்றமும் தளர்ச்சியும் ஏற்பட்டன.இரண்டு போர் முனைகளிலுமே, களப்பிர வீரர்கள் தெம்பிழந்து நம்பிக்கையற்றுப் போயினர். தோல்விக்கும், வீழ்ச்சிக்கும், இதுவே காரணமாய் அமைந்தது. பாண்டிய நாட்டின் வடக்கு எல்லைப் போரில் ஈடுபட்ட களப்பிர வீரர்களாவது தலை தப்பினால் போதும் என்று தோற்றதும், சொந்த நாட்டிற்குத் திரும்பியோடும் வாய்ப்பிருந்தது. தென் மேற்கே சேரனோடு போரிட்டுக் கொண்டிருந்த களப்பிர சேனையோ பெரும்பகுதி அழிந்து விட்டது. எஞ்சியவர்களைச் சேரன் சிறைப் பிடித்து விட்டான் என்று தெரிந்தது.

இந்தப் போரில் வென்றால், வெற்றி பெற்றதுமே மதுரை மாநகரில் நிகழப் போகும் புதிய பாண்டியப் பேரரசின் முடி சூட்டு விழா வைபவத்திற்கு வந்து, கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என முன்பே சேரனுக்கும், பல்லவனுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/484&oldid=946714" இலிருந்து மீள்விக்கப்பட்டது