பக்கம்:நித்திலவல்லி.pdf/495

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

497



மற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெரியவர். அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்றார்கள். புறப்படு முன் காராளரை நெஞ்சாரத் தழுவிக் கொண்ட வித்தகர், “தயை கூர்ந்து உடனே திருமோகூருக்குத் திரும்பிப் போய் விடாதீர்கள். முடிசூட்டு விழாவின் போது பழம் பெரும் பாண்டிய குல மரபுப்படி உங்களைப் போல வேளாளர் ஒருவர்தான் திருமுடியை எடுத்து அளிக்க வேண்டும்! இங்கே இருந்து அதைச் செய்வதற்கு உரியவர் நீங்களே!” என்று வேண்டினார். காராளரும் உணர்வு நெகிழ்ந்த குரலில், அதற்கு இணங்கினார்.

காராளரும், அவர் மனைவியும், மகளும் விடை பெற்றுச் சென்ற பின்பும் கூட, நெடு நேரம், மேலே எதுவும் செயற்பட முடியாமல் பிரமை பிடித்தாற் போல் அமர்ந்திருந்தார் மதுராதிபதி வித்தகர். நிறைவேறாத காரியங்களைப் பற்றிக் கவலைகள் பட நேரலாம். ஆனால் அவரோ, அப்போது நிறைவேற்றிவிட்ட சில காரியங்களை நினைத்துக் கவலையும், துயரமும் பட நேரிட்டிருந்தது. இந்த வெற்றி மகிழ்ச்சிக்குக் கீழே யார் யாருடைய துயரங்கள் மூடப்பட்டிருக்கின்றன என்பதை எண்ணிக் கணக்கிட்ட போது, எதற்கும் கலங்காத அவர் மனமும் கலங்கியது. உருகியது. உழன்றது.

காராளர் மகள் செல்வப் பூங்கோதைதான் எல்லாரையும் விட அதிகமாக அழுது அடம் பிடிப்பாள் என்று எதிர் பார்த்திருந்தார் அவர். ஆனால் அவள் தன்னை எதிர் கொண்ட அடக்கமும், அமைதியும் அவரையே உள்ளமுருகச் செய்து விட்டன. அவளுடைய சகிப்புத் தன்மையும், கொடுத்த வாக்குறுதியைக் காக்கும் வன்மையும் இவ்வளவு பெரிதாயிருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. பற்றற்ற துறவிகளை எல்லாம் விடப் பெரிய துறவியாக அவள் நடந்து கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு முன். அவரே கூசிக் கூனிச் சிறிதாகியிருந்தாற் போல் தமக்குத் தாமே உணர்ந்திருந்தார். அவள் கூறியிருந்த சொற்கள் இன்னும் அவர் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன. உறுத்திக் கொண்டேயிருந்தன:

நி.வ-32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/495&oldid=946725" இலிருந்து மீள்விக்கப்பட்டது