பக்கம்:நித்திலவல்லி.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

53



வண்டியிலிருந்து விரைவாகக் கீழிறங்கி வந்து நடு வண்டியை நெருங்கினர். செல்வப் பூங்கோதை வண்டியை அணுகி, உள்ளே அம்பாரமாய்க் குவிந்திருந்த செந்தாமரைப் பூக்களை விலக்கியதும், அந்தப் பூக்களின் நடுவேயிருந்து ஒர் அழகிய ஆடவனின் முகம் மலர்ந்தது. பல சிறிய தாமரைப் பூக்களின் நடுவே ஒரு பெரிய செந்தாமரைப் பூ மலர்ந்து மேலெழுவது போல், இளைய நம்பி அந்தப் பூங்குவியலின் உள்ளேயிருந்து எழுந்திருந்தான். செல்வப் பூங்கோதை மிகவும் அநுதாபத்தோடு அவனைக் கேட்டாள்:- ‘மூச்சுவிடச் சிர்மமாயிருந்ததா? பூக்களின் ஈரமும், குளிர்ச்சியும் அதிகத் துன்பத்தைத் தந்தனவா?”

‘ஒரு சிரமமுமில்லை! இப்படிப் பயணம் செய்ய முன் பிறவியில் நான் புண்ணியம் செய்திருக்கவேண்டும். நிலவின் கதிர்களையும், பனி புலராத பூக்களின் மென்மையையும் இணைத்துச் செய்த பஞ்சணையில் உறங்குவது போன்ற சுகத்தை ஆயிரத்தெட்டுத் தாமரைப் பூக்களும் எனக்கு அளித்தன. இத்தனை சுகமான அநுபவம் இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரமன்னனுக்குக் கூடக் கிடைத்திருக்க முடியாது பெண்ணே?”

‘அந்தப் பூத பயங்கரப் படையைச் சேர்ந்த முரடன் ‘பூக்குவியலை வாளால் குத்தி சோதனை செய்வேன்’ என்றபோது எனக்கு மூச்சே நின்று விடும் போலாகிவிட்டது. நீங்கள் ஏறி வந்த வண்டிப் பூக்களை நாங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்றாலும், அவனிடம் நான் பொய் கூற வேண்டியிருந்தது.”

“நீ அவ்வளவு தூரம் பதறியிருக்க வேண்டிய அவசியம் இல்லை, பெண்ணே! அப்படியே அவன் வாளால் குத்தியிருந்தாலும், எனக்கு எதுவும் ஆகியிருக்க முடியாது. நான் காதில் கேட்ட பேச்சிலிருந்து எனது கை தென்பட்ட இடத்தில்தான் அவன் வாளைச் செருகிப் பார்ப்பதாக இருந்தான் என்று தெரிந்தது. அதனால் வாள் நுனியில் இரண்டொரு தாமரைப் பூக்கள் குத்திச் சொருகிக் கொண்டு போயிருக்கலாமே தவிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/54&oldid=945241" இலிருந்து மீள்விக்கப்பட்டது