பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நினைவுக் குமிழிகள்-1 அதிவீரராமபாண்டியனின் வெற்றிவேற்கையில் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல் உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது என்பவை போன்றவற்றின் .ெ பா ரு ள் சிறுவர்களின். அநுபவத்திற்கு ஏற்றவையாயினும், அச்சம் உள்அடக்கி, அறிவு அகத்து இல்லாக் கொச்சை மக்களைப் பெறுதலின், அக்குடி எச்சம் அற்று, ஏமாந்திருக்கை நன்றே அறத்திடு பிச்சை கூவி இரப்போர் அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர் சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர் என்பவை சிறுவர்களின் அநுபவத்திற்கு அப் எற்பட்டவை யாகும். உலகநாத பண்டிதர் இயற்றிய உலகரீதியிலும் சிறுவர் கட்கு உகந்தவையும் உண்டு; அவர்கள் சிந்தனைக்கு அப்பாற் பட்டவையும் உண்டு. இந்நூலிலுள்ள பாடல்கள் அறுசீர் விருத்தம் போல் இருப்பினும் ஒவ்வோர் அடியிலும் பப்பாதி ஒருபழமொழிபோல் பொருள் முடிவு கொண்டவையாய் உள்ளன . ஒதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம். மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம். மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்கவேண்டாம். கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம். இவற்றின் பொருள் சிறுவர்க்குப் புரியக்கூடியவையாய் உள்ளன. ஆனால்,