பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 நினைவுக் குமிழிகள்-1 சொன்னபனங் காலுண்டு கொள்ளி ஆடைத் துண்டமுமொன் றுண்டு தந்து சுடுதி யன்பால் அன்னவன்றான் படியாக எனக்குத் தந்த வாய்க்கரிசி யானளிப்பே னறிதி என்றான்."" அடுத்து வரும் இரண்டு பாடல்களும் வேலூர் வாத்தியார் சுவைத்துக் கற்பித்தவை : துஞ்சியமைந் தனைஎடுத்துச் சுமந்து போந்து சுடுவாரற் றிடுகாட்டில் தோல்மேல் ஏற்றிப் பஞ்சுபடும் பாடுபடும் பாவி யேற்குப் பணமேது கொள்ளிமுறிப் பாதி யேது நெஞ்சுதளர்ந் தருவினையேன் வருந்தக் கண்டு நீஇரங்காய் என இரந்து நிற்குங் காலை வஞ்சிதிரு மணிமிடற்றில் வயங்கா நின்ற மங்கலநாண் கண்டிறைவன் மதித்துஞ் சொல்வான். நல்லைநல்லை அறச்சமர்த்தி நீயே கண்டேன் நன்னுதலா ரனைவரினும் இந்த்ர சாலம் வல்லைவல்லை விறகுகளும் களவே செம்பொன் மங்கலநாண் உன் கழுத்தில் இருக்க ஏதும் இல்லை.எனச் சொல்வது சற்றும் ஏலாது இதனை எனக் கீவாய் என்று இயம்ப வேடர் பல்லம் உயிர் நிலைவாயிற் பட்ட மான்போல் பதைபதைத்துப் பைந்தொடியாள் பதறி வீழ்ந்தாள்.'" சந்திரமதி தன் கழுத்தில் பூண்டிருந்த மங்கலநாண் தன் கணவனையன்றி ஒருவருமே கண்டறியாத மங்கலநாண் 36. மயா. காண் 40. 37. டிெ. 41, 42,