பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்ன மடத்தில் புகலிடம் 171 கருதிய நூல் கல்லாதான் மூட னாகும்; கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்; ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும்: ஒன்றுக்கும் உதவாதான் சோம்ப னாகும்; பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும் பேசாம விருப்பவனே பேய னாகும்; பரிவுசொலித் தழுவினவன் பசப்ப னாகும்; பசிப்பவருக் கிட்டுண்ணான் பாவியாமே ' (முகடி-மூதேவி) வேணுகோபால் பெரும்பாலும் குளத்தங்கரையில் சோம்ப னாக உட்கார்ந்திருப்பார். 'ஒரு தொழிலும் இல்லாதான்... - - - - - - ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்” என்ற அடி களைச்சொல்லும் போது தன்னைப் பரிசோதித்துக் கொள் வார்; தன் நிலைக்கும் வருந்துவார். அடியிற்கண்ட இரண்டு பாடல்களைச் சொல்லும் போது அளவற்ற மகிழ்ச்சி அடைவார். திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி இரப்பவர்க் கீயாக் கைகள் இனியசொற் கேளாக் காது புரப்பவர் தங்கள் கண்ணிர் பொழுதரச் சாகாத் தேகம் இருப்பினும் பயனென் காட்டில் எரிப்பினும் இல்லை தானே.” முதலடியைப் படிக்கும்போது என்னையறியாமல் ஓர் உணர்ச்சி எழும். இந்த உணர்ச்சிதான் பிற்காலத்தில் நான் விெவே. சிந்தா.20 2. டிெ, 28