பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நினைவுக் குமிழிகள்-1 நன்றாகப் படிக்குமாறு அறவுரை பகர்வார். பின்னர் நான் புதிதாகத் தொடங்கப்பெற்ற பெருநிலக் கிழவர் உயர் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியனாக இருந்தபோது1944 என்று நினைக்கின்றேன்-இவர் காலகதி அடைந்தார். தந்தையை இழந்தாற்போன்ற உணர்வுடன் இவர் இல்லம் சென்று துக்கம் விசாரித்துத் திரும்பினேன். "தமிழ் பயிற்றும் முறை என்ற என் பெருநூ லின் மூன்றாம் பதிப்பு 1980இல் வெளிவந்தது. அதில் தாய் மொழியாசிரியர்கள்’ என்ற தலைப்பில் ஓர் இயலைப் (இயல்-17) புதிதாகச் சேர்த்துள்ளேன். அதிலுள்ள ஒரு கருத்தினை ஈண்டுத் திரும்பக் கூறுதல் பொருத்தமாகின்றது. 'ஏனைய பாட ஆசிரியர்கள் மாணாக்கர்களின் அறிவைப் பெருக்குவதற்குக் காரணமாக இருக்க, இலக்கியம் கற்பிக்கும் தமிழ்மொழியாசிரியர்கள் இவர் தம் உள்ளத்தைப் பண்படுத்துபவர்களாக அமை கின்றனர். இஃது இவர்தம் பெரும் பேறாகும். இறைவனின் திருவுள்ளமுமாகும். இதனைத் தாய்மொழி யாசிரியர்கள் சிந்தித்துத் தமது கடமைகளை-பொறுப்பு களை -உணர்வார்களாக." இந்தக் கருத்தினைக் கொண்டவர் A. இராமசாமி அய்யர் என்பதை இப்போது நினைந்து பார்க்க முடிகின்றது. குமி N- 24 24. நற்பழக்கங்கள் படிதல் துறையூரில் படிக்குங்கால் சில நற்பழக்கங்கள் என்னிடம் ஏற்பட்டன. அதிகாலையில் எழுந்து நீடாடுதல் என்ற பழக்கத்தை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். இந்தப் பழக்கம் இன்றுவரை நிலைத்து நிற்கின்றது. 7. தமிழ் பயிற்றும் முறை (மூன்றாம் பதிப்பு)-பக்.544