பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லாசிரியர்கள் இருவர் 205 போகும் கருத்துகளை ஏற்பதற்கு மாணாக்கர்களின் மனத்தைத் தயார் செய்வதே இப்படியின் நோக்கம். ஏற்கெனவே அறிந்துள்ளவற்றுடன் புதிய செய்திகளை இணைத்தால்தான் அவை நன்கு பொருந்தி அநுபவமாகும். எனவே, கற்பிக்கும் ஆசிரியர் மாணாக்கர்களின் முன்னறி வினைச் சில வினாக்களால் சோதித்து அறிதல் வேண்டும். இதனை அறியாது கற்பிக்கும் ஆசிரியரின் முயற்சி கொன்னே கழியும். கற்பிக்கும் பாடத்தையொட்டி ஒரு சில தேர்ந் தெடுத்த வினாக்களை விடுத்தால் மாணாக்கர்கள் ஏற்ற விடைகள் பகர்வர்; அவ்விடைகளிலிருந்து அவர்களுடைய முன்னறிவுத் திரளையைத் (Apperceptive mass) தெரிந்து கொள்ளலாம். இந்தப் படியைச் 'சிக்கெனப் பிடித்துக் கொண்டு’ கே. இராமச்சந்திர அய்யர் கற்பித்தார் என்பதை இப்போது நினைவுகூர முடிகின்றது. இன்முகத்துடன் இவர் வகுப்பிற்குள் நுழைவதே அற்புதமாக இருக்கும். பஞ்சகச்சம், மூடிய நிலையிலுள்ள மேலங்கி (Close coat) அணிந்திருப்பார். முல்லை மலர் போன்று நல்ல வெளுப்பான துணியாலான தலைப்பாகை இவர் தலையை அணி செய்யும். நெற்றியில் திகழும் திருநீற்றுப்பட்டையும் சந்தனப் பொட்டும் பொன்னிற முகத்திற்குப் பொலிவூட்டும்; புன்முறுவல் பூத்த முகம் அறிவொளி வீசி நிற்கும். இவர் அங்கவஸ்திரம் அணிவ தில்லை. இவர் வகுப்பில் அமர்வதே இல்லை. வகுப்பில் நுழையும் போதே கரும்பலகைத் துடைப்பான் (துணிதான் பயன்படுத்தப் பெற்றது) நாலைந்து சுண்ணக் காம்புகள் கொண்டு வருவார். வரலாற்று ஆசிரியர் கதை சொல்லுவது போல் ஆரம்ப கணிதத்திலுள்ள கணக்கின் சூழ்நிலையை உண்டாக்கி விடுவார். இலாப-நட்டம், கூட்டு வாணிகம், வட்டிக்கணக்கு, கூடுவட்டி (Compound interest) இவற்றைக் கற்பிப்பது அற்புதமாக இருக்கும். வகுப்பறையிலிருப்பதை