பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 நினைவுக் குமிழிகள்-1 கலந்து கொள்பவர்போல் தோற்றமளிக்கும் என்று கருதித் தான் பெரும்பாலோர் தலைப்பாகை அணிந்து கொண்டார் களோ என்று என் மனம் இப்போது எண்ணுகின்றது . எது காரணமாக இருப்பினும் த ைல ப் பா ைக அணிந்து கொண்டால் அது எடுப்பான தோற்றத்தையும் முகப் பொலிவையும் தந்தது என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை. நாராயணசாமி அய்யர் மிக மெதுவாகப் பேசுவார்; அளவான சிரிப்பு இவர் உதடுகளில் முகிழ்க்கும். அந்தச் சிரிப்பில் எந்தவித களையும் இராது. கற்பிப்பதில் மிக வல்லவர் என்று சொல்ல முடியாவிடினும் உண்மைத் தொண்டர் என்றே சொல்ல வேண்டும்; சுவையான முறை யில் எடுப்பான குரலில் கற்பித்திருந்தால் நல்ல பெயர் எடுத் திருக்கலாம். இவர் கற்பித்தமுறை மாணாக்கரிடம் எந்த விதமான தாக்கமும் ஏற்படுத்தவில்லை. சிலர் இவரை "ஊமையன்" என்றே குறும்புப் பெயரால் குறிப்பிட்டனர். சில மாதங்கள்தாம் இவர் நான்காம் படிவத்தில் பொது அறிவியல் கற்பித்தார். அதன் பிறகு வின்சென்ட் என்ற திருநாமம் கொண்ட அறிவியல் இளங்கலைப் பட்டதாரி ஒருவர் அமர்த்தப் பெற்றதால் அவரிடம் இப்பொறுப்பு அளிக்கப் பெற்றது. பொறுப்பு ஏற்றுக் கொண்ட சில திங்களிலேயே மாணாக்கர்களிடம் பெரும் புகழ் பெற்றார். குழாய்ச் சட்டை, திறந்த மேலங்கி (Open coat), கழுத்துப் பட்டைத் தொங்கல் (Tie), கால் புதை அரணம் (Shoe), கிராப்புத்தலை-இவற்றை அழகுடன் அணிந்த தோற்றம் இவர் புகழுக்கு ஒரு காரணமாக இருந்தாலும் எளிமை யாகவும் அன்பாகவும் பழகும் முறை, மனத்தில் கருத்துகள் ஆழப்பதியும் முறையிட கற்பித்த பாங்கு இவைதாம் இவர் புகழுக்கு முதற்காரணமாக இருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்கிலமும் அருந்தமிழும் கலந்த மணிப்பிரவாள நடையில்தான் கற்பிப்பார். ஆங்கிலத்திலேயே கற்றவராத