பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நினைவுக் குமிழிகள்-1 'பின்னும் அவள், மாபெருந் துயரத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கின்றாள் என்பதனை, அவள் வாய் முறுவலே எமக்குக் காட்டலின், யாங்கள் மட்டும் 'எம் பெருமான் அத் தீநெறியிலிருந்து (பரத்தையொழுக்கம்) உய்தல் ைேண்டுமே என்று தெய்வத்தை நினைந்து வாழ்த்தி யிருந்தோம்; யாம் ஊரன் வாழ்க என வேட்டேம்' என் கின்றாள். இனி தலைவன் இங்ங்ணம் தீ நெறிக்கண் ஒழுகு வதற்குப் பாணனே காரணம்' என்பதனை அறிந்தவளா யினும், இகழ்ச்சிக் குறிப்பால் பாணனும் வாழ்க’ என்று ஒதுகின்றாள்.' ஐங்குறுநூற்றில் உள்ளுறை அமைந்திருப்பதைப்போல் வேறு எந்த நூலிலும் அஃது அமைந்திருப்பதைக் காணல் இயலாது. ஈரடியிலும் உள்ளுறை; ஒரடியிலும் உள்ளுறை. அவை மிகச் சுருங்கிய அளவில் பெருகியபொருளை உள்ளடக்கி நிற்கின்றன. சில சொற்கள் நின்று பல வகையான பொருளைக் காட்டுகின்றன. பேருருவங்களைக் கண்ணாடி தனக்குள் அடக்கிக் காட்டுவது போலப் பெரும்பொருளை அடக்கிக் காட்டுகின்றன. நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன் என்பது மருதத் திணைக் கருப்பொருளைக் கொண்ட உள்ளுறை. "அரும்புகளையுடைய காஞ்சி மரத்தின் கிளை களில் சிறிய மீன்கள் தங்கியிருக்கும் புதுமை வாய்ந்த மருத நிலத்தலைவன்’ என்பது இதன் பொருள். நாங்கள் ஆற்றங்கரையடுத்து வளைந்து நீரில் படிந் திருக்கும் மரத்தின்மேல் ஏறி நீரில் குதிப்போம். அந்த மரம் காஞ்சி மரமா, அல்லது வேறு மரமா என்பது எங்க ளுக்குத் தெரியாது. நாங்கள் அவ்வாறு குதிப்பதற்கு முன்னர், அம்மரத்தின் பல கொம்புகளில் நறுமணம் கமழும்