பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வாத கூறுகள் மழுங்கல் 273 மாக பழகினமையாலும் அவர் என்மீது அளவற்ற அன்புகொண்டிருந்தார். பிறவியிலே அவரிடம் ஆசிரியப் பண்பு நன்கு அமைந்திருந்தபடியாலும், அவரும் உயர் நிலைப் பள்ளியில் கணிதத்தையும் இயற்பியலையும் (Physics) விருப்பப் பாடங்களாக எடுத்துப் படித்தமை யாலும் கணிதத்தில் அவவப்பொழுது ஏற்படும் ஐயங்களை அற்புதமாக அகற்றுவார்; மிக அன்பாகவும், பரிவுடனும் கலந்து பழகுவார். நான் பள்ளியிறுதி வகுப்பில் பயின்ற போது (ஒரு டிசம்பர் திங்கள் என்று நினைக்கிறேன்) அவர் வேற்றுாருக்கு மாற்றலாகிப் போக நேர்ந்தது. உணவு விடுதியில் தேநீர் விருந்துடன் ஒரு வழியனுப்புக் கூட்டம் நடைபெற்றது. ஒரு சில மாணாக்கர்கள் அவர்தம் அருங் குணங்களைப் பேசினார்கள். நான் பேசும்போது அழுதே விட்டேன்; வடிவகணிதத்தில் யான் இனி யாரிடம் போய் ஐயங்களை அகற்றிக் கொள்வேன்? இது எனக்கு வலக்கை இழந்ததுபோன்ற துக்கமாக இருந்தது. ஆயின், ஒருவாறு அமைதியுற்றேன். என் வாழ்க்கையில் தோன்றாத் துணை யாக இருக்கும் இறைவனே எனக்கு வழி காட்டுவான் என்ற நம்பிக்கையோடு இருந்து விட்டேன். -18–