பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. படிப்பதற்குப் பணஉதவி Г5 тай. இடைநிலை வகுப்பில் இரண்டாவது ஆண்டுப் படிப்பில் இருந்தபொழுது ரெட்டிஜனசங்கம் ரெட்டிகுல இளைஞர்கட்கு மாணவர் படிப்புதவிச் சம்பளம் (Scholarship) தருவதாகச் சிலர் சொல்லக் கேட்டிருந்தேன், செய்தித் தாள்களிலும் இந்தச் செய்தி வெளிவந்திருந்தது. இளங்கலை வகுப்பில் சேர்ந்து பயிலும்போது இதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதியிருந்தேன். கல்லூரி யில் சேர்வதற்கு முன் கோட்டாத்துார் சென்று என் ஒன்று விட்ட தமையன் திரு. ஞானி சதாசிவ ரெட்டியாரை இட்டுக் கொண்டு துறையூர் சென்று திரு பிரசன்ன முத்து வேங்கடாசலதுரை (பி. ஏ.பி.எல்.) என்பவரைச் சந்தித்து எனக்குப் படிப்புதவிச் சம்பளம் பெறுவதற்குரிய எல்லாத் தகுதிகளும் இருப்பதாக சான்றிதழ் ஒன்றையும், அக் காலத்தில் சென்னையில் மிகவும் புகழ் வாய்ந்த வழக்குரைஞ ராக இருந்த திரு இ.வி. சுந்தரரெட்டி (பி.ஏ பி எல்.) என்பவருக்கு ஒரு பரிந்துரைக் கடிதமும் பெற்றேன். அந்தக் காலத்தில் ரெட்டியார் வகுப்பில் பட்டம் பெற்ற வர்கள் நால்வர்தாம். இருவர் துறை பூர் பெ ருநிலக் கிழவரின் இரு மக்கள் பிரசன்ன விசய வேங்கடாசலது ரை, பிரசன்ன முத்து வேங்கடாசல துரை என்ற இருவரும், நாமக்கல் வட்டத்தைச் சேர்ந்த அலங்காநத்தம் என்ற ஊரைச் சேர்ந்த பொன்னுசாமி ரெட்டியார் என்பவரும் ஆவர். மூவரும் இளங்கலைப் பட்டம் பெற்று, சட்டம் பயின்று, அத் துறையிலும் பட்டம் பெற்றவர்கள். நான்காவதாகப் பி.ஏ.பட்டம் பெற்றவர் என் அரிய நண்பர் கல்லூரித் தோழர் திரு. பா. அரங்கசாமி ரெட்டியார். அக்காலத்தில் துறையூர் பெருநிலக் கிழவராக இருந்தவர் கல்வியறிவில்லாத வர். அரண்மனையைவிட்டு வெளியில் வராதவர்.