பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பயிற்சி பெறுவதில் ஆர்வம் 93 - -- - - -- அப்பாவும் நானும் முதல் ஞாயிறன்று காலைச் சிற்றுண்டி.யை முடித்துக் கொண்டதும் புறப்பட்டோம். முற்பகலில் அரும்பொருள் காட்சியகம், கன்னிமாரா நூலகம் ஆகியவற்றைச் சுற்றிப் பார்ப்பதற்கு முற்பகல் ஒருமணி ஆகிவிட்டது . எழும்பூர் வந்து உணவு கொண்டு உயிர்காட்சி சாலைக்குப் போனோம். உண்ட களைப்பைப் போக்கிக் கொள்வதற்காக உயிர்க்காட்சிச் சாலைக்குப் போகும் சாலையிலுள்ள ஒரு மரத்து நிழலில் சிறிது நேரம் உட்கார்ந்து பொழுது போக்கினோம். சரியாக பிற்பகல் மூன்று மணிக்கு நுழைவுக் கட்டணம் செலுத்தி உயிர்காட்சிச் சாலைக்குள் நுழைந்தோம். பல்வேறு பிராணிகள்-ஊர்வன, பறப்பன, நீந்துவன, த ா வி க் கு தி ப் ப ன, நடப்பன என்றெல்லாம் வரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்தோம். சென்னைக்கு இது என் முதற் பயண மாதலால் இப்பிராணிகளின் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது , அடுத்து, மிகவும் புகழ் பெற்ற 'மூர் சந்தை ' (Moor Market) என்ற இடத்திற்கு வந்து சுற்றிப் பார்த்தோம். “நினை வாக இருக்கட்டும்' என்று ஏதோ பொருள் வாங்கின தாக நினைவு. அடுத்து, 'மைய இருப்பூர்தி நிலையம்' (Central Railway Station) என்ற இடத்தைச் சுற்றிப் பார்த்தோம். பின்னர் பூங்கா நிலையம் வந்து மின் இருப்பூர்திமூலம் சரியாக மாலை ஏழரை மணிக்குப் பல்லாவரம் வந்தடைந்தோம். இஃது சென்னைக்கு முதற் பயணமாதலால் 'பட்டிக் காட்டான் யானையைக் கண்டது' போன்ற ஒருவித வியப்பும் வேடிக்கையுமாக இருந்தது . அடுத்த ஞாயிறன்று மீண்டும் என் சென்னை சுற்றுலா தொடர்ந்தது. உலகப் புகழ்பெற்ற திருவல்லிக்கேணி கடற்கரை, மாநிலக் கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வு மண்டபம், பல்கலைக்கழகப் பல்வேறு துறைகள் முதலிய வற்றையெல்லாம் சுற்றிப் பார்த்தோம். இவையனைத்திலும்