பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 நினைவுக் குமிழிகள்-1 வலியுறுதித்தினார். இருசாராரும், ஒப்புக் கொள்வது போல் தலையசைத்தனர், என்மைத்துனர் இல்லத்தில் பெரிய சிற்றுண்டி விருந்து நடைபெற்றது . காவல் துறையினரும், இருசாராருமே விருந்தில் கலந்து கொண்டனர். காவல் துறையினர் ஊரைவிட்டு வெளியேறியதும் இருசாரார் பக்கலிலும் தலைக்கும் மேலேறியது. தன் முனைப்பு காவல் துறையினரும் தம் அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகும் என்பதை நன்கு அறிந்திருந்தனர். நி3) றந த அநுபவம் உள்ளவர்களல்லவா? குமிழி -58 58. வேலை தேடும் படலம் - இல் இளங்களைப்பட்டத் தேர்வில் (B.Sc) முதல் வகுப்பில் (கல்லூரியில் முதல் மாணவனாகவும், பல்கலைக்கழக நிலையில் மூன்றாவது மாணவனாகவும் தேர்ச்சி பெற்றேன். இந்த ஓராண்டுக் காலம் (1939-40) வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டிருந்தேன். திருமணம் ஆன பிறகு பொட்டணத்தில் மாமனார் வீடிலேயே தங்கியிருந்தேன். அக்காலம் இந்தியா அடிமை நாடாக இருந்தது : இரண்டாம் உலகப் பெரும்போர் நடைபெற்று வந்தகாலம், நாட்டில் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. எங்கெங்கோ விண்ணப்பங்கள் அனுப்பினேன். எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்று இடங்களுக்கு விண்ணப்பித்தது நினைவுக்கு வருகின்றது. இருப்பூர்தித் துறையில் விடுவிக்கும் பயணச் சீட்டுத்திரட்டுபவர் (Relieving Ticket Collector) பதவிக்கு விண்ணப்பித்தேன். வாரச்சம்பளம் ரூ 10;-; அதுவும் ஒருசில வாரங்களுக்கு வேலையிராது பரிந்துரைக்க யாராவது