பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 நினைவுக் குமிழிகள்-1 என் அன்னையாரைக் கோட்டாத்தூரிலிருந்து உணவு தயாரிப்பதற்காக வரவழைத்திருந்தேன். அப்போது கோட்டாத்தூரிலிருந்து குணம் நல்லப்ப ரெட்டியாரும் (என் ஒன்றுவிட்ட தமக்கையின் கணவர்) சிகிச்சை பெற்று வந்தார். இவர் திருமணம் ஆன ஒன்றிரண்டு ஆண்டுகளி லிருந்து (1929) அவர் மறைந்தவரை (1982) நோயையே செல்வ மாகப் பெற்று அநுபவித்தவர். அரை நூற்றாண்டு சிறுநீர் இறங்காமல் துன்பப்பட்டவர். சில நாட்கள் நன்றாக இருப்பார்; திடீரென்று நீரடைப்புத் தோன்றும். மடை திறந்து நீர் வெளிப்படுவது போல் பணம் பெருகியோடும், ஓர் இலட்சம் ரூபாய்வரை மருத்துவச் செலவு ஆகியிருக்கும் என்பது என் கணிப்பு. அவர் நிலையைக் கூர்ந்து கவனித்தவ னாதலால் என் கணிப்பு சரியாகவே இருக்கும். அவரும் எங்க ளுடன் உணவு கொண்டார். கணக்குப் பார்க்காமல் பிறருக்காகச் செலவிடும் கருணாநிதி. அவர் பேச்சுத் துணைக்கு இருந்ததால் எங்கட்குப் பொழுது போவதே தெரியவில்லை. டாக்டர் காளமேகமும் நகைச்சுவையுடன் உரையாடும் பண்புடையாளர், கந்தசாமி என்பவர் டாக்டர் காளமேகம் மருத்துவமனை யில் மருந்தைக் கூட்டுவோர் (Compounder). பிணியாளர் களுடன் நகைச்சுவையுடன் பேசி அவர்களை மகிழ்விப்பவர். ஒரு நாள் திருச்சி நகர மண்டப (Town ha!!) மைதானத்தில் ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற்றது. தந்தை ஈ. வெ. இராமசாமிப் பெரியார் உரையாற்றினார், அவருக்கு முன் வேறு சிலரும் உரையாற்றினர். அப்போது இருந்தது சுயமரியாதைக் கட்சி; திராவிடக் கழகம் என்ற பெயரில்லை ! கூட்டத்தில் மூடப் பழக்களைப்பற்றியும் இவ் வளவுக் கும் காரணம் கடவுள் நம்பிக்கைதான் என்றும் விரித்து உரைக்கப் பெற்றன. அன்று பேசிய ஒருவர், “நாங்கள் பிராமணர் களைக் குறைகூறவில்லை; வையவில்லை. தனிப்பட்ட