பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைதையில் என் கல்லூரி வாழ்க் ைக 457 திரும்புவார். நான் திருமணமானவனாக இருந்தாலும் என் மனைவி நோயுற்றிருந்தமையால் வீடு அமர்த்திக் கெ ள்ள வில்லை. அவள் உடல் நிலை நன்றாக இருந்தாலும், நான் குடும்பம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. முதற் காரணம் அவள் தன் பாட்டியைக் கவனித்துக் கொள்ள வேண்டி யவளாக இருந்தாள். இரண்டாவது காரணம், நான் மாணி நிலையிலிருந்து படிக்க விரும்பினேன். இதனால் குடும்பம் அமர்த்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலை தான் என் மன நிலைக்குப் பொருத்தமாகவும் இருந்தது. குமிழி-61 61. சைதையில் என் கல்லூரி வாழ்க்கை நான் கல்லூரியில் சேர்ந்ததும் அதற்குரிய கட்டணங் களையும், மாண வர் உணவு விடுதியில் சேர்ந்ததும் அதற்குரிய கட்டண ங்களையும் செலுத்திவிட்டு மீதி ரூபாய் நூறை அஞ்சல் நிலையம் சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்துக் கொண்டேன். ஒரு திங்கள் கழித்து ஆலத்துடையாம்பட்டிக்கு அவசரக் கடிதம் எழுதி மீதி ரூ 500/-யும் தருவித்து அஞ்சல் நிலையக் கணக்கில் போட்டு வைத்துக் கொண்டேன், இதனால் இந்த ஆண்டு முழுவதற்கும் ஒருவர் கையையும் எதிர்பார்க்காமல் படிப்பு யாதொரு தடையுமின்றிச் சென்றது. இந்த ஆண்டே என் ஆசிரியப் பயிற்சிப் படிப்புப் பயிற்சி முடிவதற்குள் நான் விற்ற நிலத்தை வாங்கினவர்கள் (ஆறு மாதத்திற்குள்) ரூ 1500/-க்கு விற்றுவிட்டனர் என்பதை யும் அறிந்தேன். அக்காலத்தில் சைதாப்பேட்டை தனி நகராண்மைக் கழக ஆட்சியிலிருந்தது. பின்னர்தான் சென்னை மாநகராட்சி யின்கீழ் வந்தது. நகராண்மைக் கழக ஆட்சியிலிருந்தபோது