பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 நினைவுக் குமிழிகள்-1 புன்மொழிப் புலமையையும் கண்ட மாணவர்கள் அனைவரும் ஒரு மன தாக இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். ஏறக்குறைய ஆறு, ஏழு மாத காலம் (செப்டம்பர் முதல் - ஏப்பிரல் வரை) அவருக்கு இலவசமாக உணவு வழங்கப் பெற்றது. அறை வாடகை, நிலைய வகைச் செலவு (Esta- blishment Clarges) இவற்றை அவரே ஏற்றுக் கொண்டார் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இப்படியாக ஒரு நல்லவருக்கு உதவும் பேறு எங்கட்குக் கிடைத்தது, (4) சைதை மாணாக்கர் விடுதியில் தங்கியிருந்தபோது நானும் சில நண்பர்களும் மாலை வேளைகளில் அடிக்கடிக் குறுக்கு வழியாக நடந்து தியாகராய நகரிலுள்ள பனகல் பூங்காவுக்கு வருவதுண்டு. மாலை காஃபி அருந்தியவுடன் நடை கட்டுவோம். 6-15 மணியளவில் பூங்காவை அடைவோம். வழியில் ஓர் இல்லத்தில் தங்கியிருந்த M. கிருஷ்ண சாமி செட்டியாரும் (அக்காலத்தில் திருச்சியில் நாங்கள் அவரை எம்.ஏ, செட்டியார் என்றே வழங்குவோம்) எங்களுடன் வருவார். இரவு 7-30 மணி வரை பல செய்தி களைப் பேசி அரட்டை ' அடிப்போம். 7-45க்கு மாம்பலம் இருப்பூர்தி நிலையம் வந்து வண்டியேறி சைதையை அடைவோம். வண்டிக் கட்டணம் அக்காலத்து அரையணா (இக்காலத்து 3 காசு). சில சமயம் பூங்கா அருகில் அரசியல் கூட்டங்கள் நடைபெற்றால் அவற்றையும் செவிமடுப்போம். ஒரு சமயம் பேராசிரியர் கல்கியவர்கள் பேசியதை நினைவு கூர்கின்றேன். செய்திகளை துணிவாக எடுத்தியம்பும் நெஞ்சுரமும், ஆற்றொழுக்கான தமிழ்ப் பேச்சும், ஆராத தமிழ்க் கா;' லும், நாட்டுப்பற்றும் அவருடைய பேச்சில் வெளிப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தேன்; என் நண்பர்களும் மகிழ்ந்தார்கள்.