பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 நினைவுக் குமிழிகள்-1 துறையூரில் தலைமையாசிரியாகப் பணியாற்றியபோது இவர் நட்பை நாடி நன்கு பழகி வந்ததுண்டு. மிக்க அன்புடனும் பொறுமையுடனும் எவர்க்கும் உதவுவார். இலக்கியத் திறனாய்வு பற்றி ஐ.ஏ, ரிச்சர்ட்ஸ் எழுதிய “ இலக்கியத் திறனாய்வு' என்ற நூலை எனக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமகனார் இவர். தவிர, இந்நூலின் முக்கிய பகுதிகளைக் காட்டி விளக்கமும் தந்தார். துறையூரி லிருந்து பள்ளிப் பணியாகவும் வேறு சொந்தப் பணியாகவும் திருச்சி வரும்போதெல்லாம் இவரைப் பார்த்து ஓர் அரைமணி நேரமாவது அளவளாவது திரும்புவதில்லை. பேருந்து நிலையமும் ஆண்டார் தெருவிற்கு அடுத்து வடபுறமுள்ள 'பட்டர்வொர்த்' சாலையின் முகப்பில் இருந்தமையால் எனக்கு இவ ரைப் பார்த்துப் பழகுவது எளிதாக இருந்தது . இலக்கியத் திறனாய்வில் நான் அதிகமாக ஆழங்கால் பட்டது இவரது நட்பால் என்று சொன்னால் அஃது எள்ளளவும் மிகையுரையன்று.