பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நினைவு குமிழிகள்-2

தான் என் நெஞ்சில் அடிக்கடி எழும். இடைநிலை வகுப்பு

பயின்றபோது என் மனத்தைக் கவர்ந்தவை,

நெஞ்சமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே!

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந் தெய்தும் பராபரமே” என்ற இரண்டு பாடல்கள். இவற்றை அடிக்கடி சிந்திப்பேன். பி.எஸ்சி பட்டப் படிப்பு படித்த பொழுது இவற்றை என் அறையில் மேசையருகே எழுதியும் வைத்திருந்தேன். காவிரிக்கரையில் உலவப் போகும் போதெல்லாம் அருகி லுள்ள 'ரோகாரமடம் சென்று வருவேன். அந்தமடத்து உள் மண்டபத்தில் பெரிய எழுத்துகளில் இவற்றை எழுதி ஒட்டி இருந்தேன். இந்தக் குமிழி எழுதும்போது இந்த இரண்டு கண்ணிகளும் மனத்தில் எழவே இவற்றை முதலில் குறித்தேன்.

1943-இல் ஜூலைத் திங்கள் என நினைக்கின்றேன்; என் மைத்துனரும் இராமச்சந்திர ஆச்சாரியும் துறையூர் வந்தனர். என்மைத்துனருக்கு இரண்டாம் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், பெண் சிவநாயகன் பட்டி என்றும்; திருமணம் சிவநாயகன் பட்டியில் நடைபெற்றாலும் இரண்டு மூன்று நாட்கள் முன்னதாகவே பொட்டணம் வந்து விடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் என் மைத்துனர். அந்த ஆண்டு ஆவணியில் திருமணம் நடை பெற்றது. ஐந்து நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு நானும் என் மனைவியும் திருமணத்திற்குப்போய் வந்தோம்.

பெண் வீட்டு நிலையைப் பற்றி இராமச்சந்திர ஆச்சாரி யைக் கேட்டேன். அவர் 'சிவநாயகன் பட்டியில் ஒரு சிறு

1. தா.பா. பராபரக்கண்ணி.151.

2. டிெ 155.