பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi

உ.வே. சாமிநாதய்யர், திரு. வ.வே.சு. அய்யர், டாக்டர். ரா. பி. சேதுப்பிள்ளை, சித்தாந்தக் கலாநிதி ஒளவை. சு. துரைச்சாமிப் பிள்ளை, நாவலர் வேங்கடசாமி நாட்டார். டாக்டர். அ. சிதம்பரநாதன் செட்டியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், திரு. கா. சு. பிள்ளை, திரு. வையாபுரிப் பிள்ளை போன்ற சாதிப் பின்னொட்டுகளுடன் கூடிய பெயர்கள் வழங்கி வருவதனைப் போன்று நம் பேராசிரியர் அவர்களுடைய பெயரும் வழங்கப் பெறு வதாயிற்து எனக் கொள்ளலாம்.

பொறுப்பான பதவிகளை வகிப்போர் இரு குற்றச் சாட்டுகளுக்கு ஆளாவதுண்டு, அவை, புகழ்மொழியை நச்சி அடிமையாதலும், பழிமொழியை நம்பிப் பகை கோடலு மாம். துறையூர் பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப் பேற்றுப் பணியாற்றிய பேராசிரியர் அவர்கள் மேற்கானும் இரு குற்றச் சாட்டுகளுக்கும் ஆளாகாமல் இ ரு ந் து வந்துள்ளது சிறப்புக் குரியதாகும். பள்ளியில் பயின்ற அடங்காப் பிடாரிகளைச் சமாளித்த விதமும் (பக். 275) , மொட்டை மனுக்களுக்குத் தக்க மறுமொழி அளித்த பான்மையும் (பக். 276-278), ஆசிரியர் திரு. பிச்சுமணி அய்யர் மகனுக்கு நீதி வழங்கிய நீர்மையும் (பக். 284), பேராசிரி யரின நடுவுநிலை கோடாத் தன்மைக்கும், ஏற்ற பொறுப்பின் பால் கொண்ட கடமையுணர்வுக்கும் எடுத்துக் காட்டுகளாக அமைகின்றன.

விதிக்குப் புறம்பான தன்மையில் பள்ளி நிருவாகத்துடன் பெரிதும் இனங்கி தம்முடைய சொந்த வசதிகளைப் பெருக்கிக் கொண்டு சிவனே என்று பேராசிரியர் தம் வாழ் நாளைக் கழித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு வாழ அவர் விரும்பினர்ரில்லை. தம்முடைய பணி தலைமையாசிரியர்க் கென விதிமுறைகளில் வரையறுக்கப்பட்ட பணிகளுடன் முடிவடைவதாக அவர் கருதவில்லை. பள்ளி பி ன் முன்னேற்றத்திற்காக எல்லா வகைகளிலும் பாடுபட்டுள் ள்ார். தர்த்திலும், அளவிலும் பள்ளியை மேம்படுத்தினார். பள்ளியில் மாண்வர் இலக்கியக் கழகம்’ எனும் அண்மப்பினை நிறுவி வழக்கமான கூட்டங்களை மட்டுமின்றி, பெருமக்கள் பலரையும் வரவழைத்து மாணவர்களுக்குப் பல இலக்கிருங் களையும் அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டியத் தார். இஃது ஒரு சாதனை என்றே கருதப்படுவதற்குரிய தாகும், -