பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணியத்தின் திருவிளையாடல்கள் 127

விட்டனர்; மிட்டாதார்களும் நோட்டீஸ்களை வாங்கிக் கொள்ளாததால் அவை திரும்பி அனுப்பியவருக்கே வந்து சேர்ந்துவிட்டன. -

எப்படியாவது பணம் தேடி சுப்பிரமணியத்தையும் தன் மகனையும் நீதிமன்றத்திற்கு இழுத்து தண்டனை வாங்கி வைக்கவேண்டும் என்று 'தாயுள்ளம் அலைந்தது. என் மாமியார் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் பணத்தின் மீது இருந்த பாசத்தைப்போல் பிள்ளைகள்மீதோ, தந்தையார் மீதோ, தாயார் மீதோ இல்லை. என் மாமனார் கொத்தடிமையைவிடக் கேவலமாக நடந்து கொண்டே தன் எழுபதிற்கு மேற்பட்ட வாழ்க்கையைக் கழித்துவிட்டார். அவரது மாமியாரோ தன்னுடைய பணத்தை யாருக்கும் தராமல் தன் தொண்ணுறுவயதையும் கழித்துவிட்டார். என் மாமியாரும் எதுவும் அறியாமல் கால்நடைபோல் இருந்து கொண்டே தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். எந்தவித உரிமையும் தரப்பெறாமல், குடும்பத்தில் பணவிஷயத்தில் எந்தவித பொறுப்பும் தரப் பெறாமல் 35 அகவைக்குமேல், எல்லோரும் அடங்கிய நிலையில், பணத்தின் பொறுப்பு தனக்கு வந்ததால், அதன் அருமை தெரியாமல், என் மைத்துனர் அதை வைத்துக் கொண்டு விளையாடுகின்றார். நல்ல உள்ளம் படைத்தவர் என்ற என் நம்பிக்கைக்குப் பாத்திரரானாலும், தான் என்னுடைய படிப்பின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகச் சொல்லித் தன்தங்கையை எனக்குக் கட்டிவைத்துப் பின்னர் ஏமாற்றியது. ஓர் இலட்சம் வரையில் தண்டவாளப் பெட்டி யிலிருந்தும் குடும்பவாக்கின்படி ஒரு பத்தாயிரம் தன் தங்கை யிடம் தந்து தன் பொறுப்பை விலக்கிக் கொள்ளாமைஇவற்றால் அவர் நன்கு 'கபடநாடகம் ஆடுகின்றார் என்பதை தன் நடவடிக்கையினால் மெய்ப்பித்துவிட்டார். தன்னையறியாமல் மாமனாரின் கைப்பாவையாகிவிட்டார்.