பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குத் தொடர்கள் 129

காப்பில் விடுமாறு கடிதம் எழுதினேன் என்பதாகவும் அவரும் மனமுவந்து தள்ளாத நிலையிலுள்ள என் மாமி யாரை இட்டு வந்து எங்கள் வசத்தில் ஒப்படைத்தார் என்ப தாகவும் என் நினைவு.

வந்தவரால் வாளா இருக்க முடியவில்லை. ஏமாளித் தனமாக சர்ரண்டர் பத்திரத்தை எழுதித் தந்துவிட்டு தும்பைத் தெறித்துவிட்டதால் அங்குமிங்கும் ஒடும் கன்றுக் குட்டியைப் பிடிக்க முயல்வாரைப்போல் மிட்டதார்கள்மீது எப்படியாவது வழக்கு தொடுத்து 4000/-ஐ வசூல் செய்ய வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்கள். புரோநோட்டு கள் என் மைத்துனர் வசத்தில் உள்ளன; என் மாமியார்மீது தான் புரோநோட்டுகள் உள்ளன என்பதை நான் நன்கு அறிவேன் அவற்றில் நான் சாட்சிக் கையெழுத்ப்து போட் டிருப்பதால். புரோநோட்டுகள் இல்லாமல் வீண் வழக்குகள் தொடுக்க என் மனம் ஒருப்படவில்லை; வழக்குகள் தொடுத் தால் பயன்படாது என்று கூறி மறுத்துவிட்டேன்.

வீரம ரெட்டியாரைக் கொண்டு என் மாமியார் எப்படி யாவது என்னை வழக்கு தொடுப்பதற்ரு இணங்க வைக்க முயன்றார்கள்; படாதபாடுபட்டார்கள். வீரம ரெட்டியார் உலகியலை நன்கு அறிந்தவர்; என் மாமியாரின் மனநிலை யையும் நன்கு அறிந்தவர். பணம் கிடைத்தால் இந்த அம்மாவால் வாளா இருக்கமுடியாது. குண்டுத் தம்புவோடு சேர்ந்துகொண்டு ஏதாவது செய்வார் என்று நினைத்தார். விரமரெட்டியார் தானாக யோசனைசெய்து கூறியது; .அம்மா, நான் உன் மருமகனிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் ஒத்துக்கொள்வார் என்பது எனக்குத் தெரியவில்லை. புரோநோட்டுகள் இல்லாமல் வழக்குத் தொடுத்தால், வெற்றி கிடைக்காது என்று நினைக்கின்றார்.

9-سEl