பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கு முடிவுகள் 137

குமிழி-83

19. வழக்கு முடிவுகள்

(1) மிட்டாதாகமது வழக்குகள் தொடர்ந் தாலும், சுமுகமாகப் பைசல் செய்து நீதிமன்றததிற்கு வெளியே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் மேலோங்கி நின்றது. துறையூர், நாமக்கல் பக்கச் சற்றுப்புற ஊர்களில் திருமணம், பெரியகாரியம் (இறப்பு) முதலிய நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் ஒதுக்குவதில்லை அங்குப்போகும் போதெல்லாம் திரு பொன்னுசாமி ரெட்டி யாரையோ அவர் சட்டகர் எரகுடி அரங்கசாமி ரெட்டி யாரையோ (பெரிய மனிதர்; மாவட்ட வாரியத் தலைவராக இருந்தவர்) சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போதெல் லாம் பைசல் லிஷயத்தை அவர்கள்முன் வைப்பேன். பொன்னுசாமி ரெட்டியார் கூறுவார்: "என்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலை. சுப்பிரமணியத்திற்கு எங்கள் குடும்பவிஷயங்கள் எல்லாம் நன்கு தெரியும், நான் இந்த வழக்குகள்பற்றி ஏதாவது சுமுகமாகச் செய்தால் அவர் விரோதம் ஏற்படும். எங்கள் குடும்பத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்துவார், தயவுசெய்து மன்னியுங்கள்’’ என்று சொல்லி விடுவார். எரகுடி அரங்கசாமி ரெட்டியாரை இதில் தலையிட்டுச் தம் சட்டகரை ஒருவழிக்குக் கொணருமாறு கேட்டால், பாருங்கள் உலகம் தெரியாத அப்பாவிகள். அவர்கட்குச் சொந்தப் புத்தியும் இல்லை. நல்லவர்கள் யோசனையையும் கேட்கமாட்டார்கள். வழக்குகளைத் தொடர்ந்து நடத்துங்கள். அவமானப்படட்டும்” என்று சொல்லிவிடுவார். இதற்காகப் பல வாய்தாக்கள் வாங்கிக் கொண்டு வழக்கை விசாரணைக்குக் கொண்டு வராமல் இருந் தேன். 'கொடிறும் பேதையும் கொண்டதுவிடா” என்ற பழமொழி இவர்கள் விஷயத்தில் முற்றிலும் பொருந்திற்று.