பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 நினைவுக் குமிழிகள்-2

விடுவர். ஆனால் இராமாதுசம் இங்கேயே தங்கியிருந்தார். ஓர் அமீனாவை காவல் வேலைக்குப் போட்டார்; அவர் மறுத்தார். ஏதோ காரணம் காட்டி அமீனாவைப் பதவி நீக்கம் செய்தார். அமீனா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, வென்று, மீண்டும் பதவியில் வந்து சேர்ந்தார். முனிசிப்பின் மரியாதை மலையேறிவிட்டது. அவர் மாற்றல் இல்லாமல் துறையூரிலேயே பணியாற்றியது பரிதாபமாக இருந்தது. -

சாட்சிகள் : நீதிமன்றங்களில் சாட்சிகள் நடந்து கொள்வதைப்பற்றி வக்கீல் அரங்கசாமி ரெட்டியார் எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் தருவார். ஒரு சமயம் அதிகாலையில் 4 மணிக்குத் தம் வீட்டுக்கு வந்து போகு மாறு பணித்தார். நானும் அங்ங்னமே சென்றேன்; நான் நீதிமன்றத்திற்கு எதிரிலுள்ள பள்ளியில் ஒரு சிறு இல்லத்தில் குடியிருந்தேன். கிட்டத்தட்ட ஆறு ஃபர்லாங் போய்வர வேண்டும். என்னுடைய ஊர்தி மிதிவண்டிதான். நான் சென்றபொழுது எதிர்க்கட்சிக்குச் சாட்சியாக கிளிக் கண்டில் ஏறுபவரிடம் அரங்கசாமி ரெட்டியார் பேசிக்கொண் டிருந்தார். இவர் என் பள்ளிக்கருகிலுள்ள வக்கீலால் வழக் காடும் எதிர்க்கட்சியினருக்கு முதல்நாள் இரவு 7.8 மணிக்கு அடுத்த நாள் கூண்டில் சொல்லவேண்டியவை பற்றிப் பாடம் சொல்லப்பெற்றவர். இவரை நோக்கி, உங்கள் வக்கீல் உனக்கு நீ நாளை சொல்லவேண்டியவை பற்றி என்னென்ன சொல்லிக் கொடுத்தார்: என்று கேட்க, அவரும் அவற்றை விவரமாக ஒப்புவித்தார். சரி; நீ அப்படியே சொல் லிவிடு. நான் உன்னை குறுக்கு விசாரணை செய்யும்போது இன்னின்ன கேள்விகள் கேட்பேன்; அவற் நிற்கு இப்படிப் பதில் சொல்லவேண்டும்” என்று பாடம் புகட்டினார். முதல் விசாரணையில் தரும் வாக்கு மூலத் தைக் குறுக்கு விசாரணையில் உடைத்தெறிவதற்கு இத்