பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் இல்லம்-தோற்றம் 169

மாணாக்கர்களின் சிரமம் குறைந்தாலும் எழுத்தருக்குச் சிரமம் ஏற்பட்டது; எப்படியாவது தொகையில் குறைவு ஏற்பட்டால் அவர்தானே பொறுப்பு? ஆகவே அவர் மிக விழிப்புடன் செயற்பட வேண்டியிருந்தது,

குமிழி-87 23. மாணவர் இல்லம்-தோற்றம்

முசிறிக் கழக உயர்நிலைப் பள்ளியைத் தவிர துறை யூரைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் வேறு உயர்நிலைப் பள்ளிகள் இல்லாமையால், எல்லோரும் துறையூர்ப் பள்ளி யையே நாடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 4 கல் தொலைவிலுள்ளவர்கள் கூட நடந்தோ, மிதிவண்டியிலோ வந்து சேர்ந்து பயின்றனர். அக்காலத்தில் சில ஊர்களை இணைக்கும் பாதைகள் சரியாக இல்லை. மழைக்காலத்தில் மிதிவண்டிகள் செல்ல முடியாத நிலை. இவ்வூர்களிலிருந்து வரும் மாணவர்கட்குத் தங்க இடமும் உணவு வசதியும் இருந்தால் நலம் என்று உணர்ந்தேன். அந்தந்த ஊர்களி லுள்ள பெற்றோர்களும் இதை உணர்ந்தனர். நானும் திரு.வி.சி. கிருஷ்ணசாமி ரெட்டியாரும் இதைப்பற்றிப் பல நாட்கள் யோசித்து மாணவர் இல்லம் ஒன்று தொடங்க லாம் என்ற முடிவுக்கு வந்தோம். பள்ளி நிர்வாகம் இதைப் பற்றிக் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. என்றாலும் இல்லம் தொடங்குவதற்கு இசைவு பெற்றேன். ஒரு பெரிய அமைப்பில் என்றுமே தலை இருக்க வால் ஆடக்கூடாது என்பது என் உள்ளுணர்வு காட்டும்வழி.

Í.ÍS ாணவர் இல்லம் தொடங்கினால் அதனைப் பொறுப் பேற்று நடத்த நல்ல தொண்டுள்ளம் படைத்த ஆசிரியர் ஒருவர் வேண்டுமல்லவா? வளர்ச்சி பெற்று வரும் பள்ளியின்