பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ நினைவுக் குமிழிகள்-2

நடத்தப்பெறும். ஜூன் மாதத்திற்குள் இவற்றின் விடைத் தாள்கள் திருத்தம் செ ய்யப்பெற்று மதிப்பெண்களும் விடைத் தாள்களும் செயலகத்திற்கு வந்துசேரும். பள்ளிவாரியாக மதிப்பெண்கள் பதிவேட்டில் பதியப்பெறும். 60 %க்கு மேல் பதிப்பெண் பெற்றவர்கள் முதல் வகுப்பிலும், 50%க்கு மேல் பெற்றவர்கள் இரண்டாம் வகுப்பிலும் 40%க்குமேல் பெற்ற ஆர்சன் மூன்றாம் வகுப்பிலும் தேறியதாகக் கொள்ளப் பெற்றுச்சான்றிதழ்கள் தயாரிக்கப்பெற்று அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கட்கு அனுப்பப்பெறும். தமிழாசிரியர்கள் மாணவர்கட்கு விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்.

1950 வரையிலும் (அதாவது நான் காரைக்குடிக்குப் போகும் வரையிலும்) என் தலைமையில் இத்திட்டம் நன்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் என் ملت ساسانیان نتیج) கையொப்பத்திலும் செயலர் கையொப்பத்திலும் சான்றிதழ் கள் பெற்றனர். இதைத் திருச்சி மாவட்டத் தமிழாசிரியர் கழகம் தெய்வப் பணியெனக்கருதிச் செயற்பட்டது. எனக்கு பிறகு திரு. அய்யம் பெருமாள் கோனார் இப்பொறுப்பை யேற்றுச் சில ஆண்டுகள் திறம்பட நடத்தினார். பின்னர் இத்திட்டம் செயற்படாது நின்றுபோயிற்று.

குமிழி-89 25. பள்ளியில் சிறப்புச் சொற்பொழிவுகள்

இறையூரில் பணியாற்றிய காலத்தில் பள்ளியில் மாணவர் இலக்கியக் கழகம் என்ற ஒன்றை நிறுவி அதன் ஆதரவில், வழக்கமாக நடைபெறும் அவர்கள் பேசுவதைத் தவிர, பல சிறப்புக் கூட்டங்களை ஏற்படுத்திப் பல பேரறிஞர் களை வரவழைத்து அவர்களால் பல இலக்கியங்களை