பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளியில் சிறப்புச் சொற்பொழிவுகள் 181

என்ற தொடருக்கு அழுத்தம் தந்து பாடும்போது கோழிகள் கூவுவதை நேரில் பார்ப்பதுபோல் காட்டித் தம் சொற்பொழி வைக் கேட்போரை அழவைத்து விடுகின்றார். திரும்பவும் பாடலை ஒரு முறைக்கு இருமுறை உருக்கத்துடன் பாடி கேட்போரை அயோத்தியில் கைகேயியின் அந்தப் புரத்தில் கொண்டு நிறுத் திவிடுகின்றார். அப்போது என் கண்ணில் கண்ணிர் வடிந்தது.இப்போது இதை எழுதும்போதும் கண்கள் குளமாகின்றன. -

கோழி கூவும் காட்சியை நளவெண்பாவிலிருந்தும் எடுத்துக்காட்டி ஒப்பிடுவது சிந்தனைக்குப் பெருவிருந்தாக அமையும். கலியின் செய்கையால் நளன் அதுபவித்த தொல்லைகள் சொல்விமுடியா. நளனும் தமயந்தியும் காணகத்தில் அநுபவித்த தொல்லைகள் கல்நெஞ்சரையும் கரையச் செய்யும். இருவரும் ஒராடையுடன் சேர்ந்து உறங்கும் போது நளன் விழித்துப் பாதி ஆடையைக் கிழித்து உடுத்திக்கொண்டு பிரிந்து விடுகின்றான். துயிலெழுந்த தமயந்தி நளனைக் காணாமல் வருந்துகின்றாள்.

வான்முகிலும் மின்னும்

வறு நிலத்து வீழ்ந்ததுபோல் தானும் குழலும்

தனிவீழ்ந்தாள்."

(முகில் . மேகம்; குழல் கூந்தல்)

எழுகின்றாள்: தலையிலடித்துக் கொள்ளுகின்றாள்; மீண்டும் வீழ்கின்றாள். முகில் தமயந்தியின் கூந்தலுக்கும் மின்னல் அவள் உடலுக்கும் உவமைகளாக அமைகின்றன. இரவு முழுவதும் இப்படித் தொல்லைப்படும் காட்சியை வருணித்த புகழேந்தி பொழுது புலரும் காட்சியைக் காட்டுகின்றார்.

3. நளவெண்பா-282